இன்னைக்கு ஒழுங்கா ஆடலைனா டீமை விட்டே தூக்கிருவாங்க.. சிக்கலில் சீனியர் வீரர்! #INDvsBAN

நாக்பூர் : இந்திய அணியில் மூத்த வீரர் ஷிகர் தவானை நீக்க வேண்டும் என்ற பேச்சு துவங்கி விட்டது.

வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அவர் அதிரடியாக ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

மூன்றாவது போட்டியில் அவருக்கு அணியில் இடம் கிடைக்குமா? என்றும் சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

ஸ்ட்ரைக் ரேட் குறைவு

ஸ்ட்ரைக் ரேட் குறைவு

முதல் இரண்டு போட்டிகளில் ஓரளவு ரன் குவித்தாலும், ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருந்தது. மூன்றாவது போட்டியில் ரன் குவிக்க வேண்டும் என்பதோடு, விரைவாக ரன் குவிக்க வேண்டும் என்ற அழுத்தத்தில் இருக்கிறார் தவான்.

நூறுக்கும் கீழ்..

நூறுக்கும் கீழ்..

முதல் டி20யில் 42 பந்தில் 41 ரன்கள் மட்டுமே எடுத்தார் தவான். அந்தப் போட்டியில் அணியில் அதிகபட்ச ரன்கள் அடித்த வீரர் தவான் தான் என்றாலும், அவரது ஸ்ட்ரைக் ரேட் நூறுக்கும் கீழ் இருந்தது.

சேஸிங்கில் நிதானம்

சேஸிங்கில் நிதானம்

இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் சேசிங்கில் ரோஹித் சர்மா ஒருபுறம் அதிரடி காட்டி ஆடி வந்த போது தவான் நிதானமாக ரன் சேர்த்தார். 27 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். இப்போதும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 114 தான்.

இடம் கேள்விக் குறி

இடம் கேள்விக் குறி

தவான் அதிரடியாக ஆடுவதில்லை என்பதால் அணியில் அவரது இடம் கேள்விக் குறியாகி இருக்கிறது. ராகுல் தற்போது மிடில் ஆர்டரில் ஆடி வருகிறார். அவர் அடிப்படையில் துவக்க வீரர் என்பதால், தவானை நீக்கி விட்டு, அவரை அணியில் சேர்க்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்து வருகின்றன.

கடைசி வாய்ப்பு

கடைசி வாய்ப்பு

எனினும், ரோஹித் சர்மா அணியில் பந்துவீச்சை தவிர வேறு எதிலும் மாற்றங்கள் செய்ய மாட்டார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மூன்றாவது டி20யில் தவான் விரைவாக ரன் குவித்தால் அணியில் தன் இடத்தை தக்க வைத்துக் கொள்ளலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IND vs BAN : Shikar Dhawan may get his last chance today. If he fails in 3rd T20, he could have been dropped from the team.
Story first published: Sunday, November 10, 2019, 12:53 [IST]
Other articles published on Nov 10, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X