For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வேற வழியில்லை.. விட்டுக் கொடுத்த விராட் கோலி.. டி20 அணிக்கு கேப்டன் ஆன ரோஹித் சர்மா!

Recommended Video

Indian squad Announced For Bangladesh Series | வங்கதேச தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

மும்பை : விராட் கோலி ஓய்வு அளிக்கப்பட்டு, ரோஹித் சர்மா இந்திய டி20 அணிக்கு தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா - வங்கதேசம் மோத உள்ள டி20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது.

டி20 தொடர் வரும் நவம்பர் 3 முதல் துவங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இடைவிடாமல் ஆடினார்

இடைவிடாமல் ஆடினார்

விராட் கோலி முன்னதாக உலகக்கோப்பை தொடருக்குப் பின் நடந்த வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் ஓய்வு எடுப்பார் என கூறப்பட்டது. ஜனவரி மாதம் முதல் உலகக்கோப்பை தொடரின் முடிவடைந்த ஜுலை மாதம் வரை கோலி தொடர்ந்து இடைவிடாமல் கிரிக்கெட் ஆடியதால் அந்த முடிவு எடுத்ததாக கூறப்பட்டது.

ரத்து செய்தார்

ரத்து செய்தார்

ஆனால், உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததால் வீரர்கள் சோர்ந்து போய் உள்ளனர். இந்த நேரத்தில் தான் அணியுடன் இருக்க வேண்டும் எனக் கூறி கோலி அப்போது ஓய்வை ரத்து செய்து விட்டதாக கூறப்பட்டது.

விரிசல் பேச்சு

விரிசல் பேச்சு

ஆனால், அப்போது விராட் கோலி - ரோஹித் சர்மா இடையே விரிசல் இருப்பதாக கிசுகிசு பரவியது. மேலும், கேப்டன்சியில் மாற்றம் வேண்டும் என பிசிசிஐ வட்டாரத்தில் பலரும் பேசி வந்தனர்.

மீண்டும் ஆட்டம்

மீண்டும் ஆட்டம்

அதனால் தான் அப்போது விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு கேப்டன் பதவி போய்விடாமல் ஓய்வை ரத்து செய்தார் என பரபரப்பாக பேசப்பட்டது. அதன் பின் கோலி வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர், தென்னாப்பிரிக்கா டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் இடைவிடாமல் ஆடி இருக்கிறார்.

ஓய்வு வேண்டும்

ஓய்வு வேண்டும்

இந்த நிலையில் அவர் கட்டாயம் ஓய்வு எடுத்து தான் ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. தேர்வுக் குழு இந்த விஷயத்தில் கோலி தானாகவே முடிவு எடுத்துக் கொள்ளட்டும் என விட்டு விட்டதாக கூறப்பட்டாலும், அவர்கள் கோலி ஓய்வு குறித்து லேசான அழுத்தம் கொடுத்துள்ளனர் என கூறப்படுகிறது.

டி20 தொடர் தான் சரி

டி20 தொடர் தான் சரி

டெஸ்ட் போட்டிகள் அனைத்தும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் வருவதால் அப்போது அவரால் ஓய்வு எடுத்துக் கொள்ள முடியாது. எனவே, டி20 தொடர்களில் தான் ஓய்வு எடுத்துக் கொள்ள முடியும்.

ரோஹித் கேப்டன் ஆனார்

ரோஹித் கேப்டன் ஆனார்

அதை அடுத்து வங்கதேச டி2௦ தொடரில் கோலி ஓய்வு எடுத்துக் கொள்ள சம்மதித்துள்ளார். அடுத்து துணை கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா கேப்டன் வாய்ப்பை பெற்றார்.

வெற்றி உறுதி

வெற்றி உறுதி

ரோஹித் சர்மா ஏற்கனவே பல டி20 தொடர்களில் இந்திய அணியை வெற்றிகரமாக வழிநடத்தி உள்ளார். அதனால், வங்கதேச தொடரிலும் அவர் சிறப்பாக அணியை வழிநடத்துவார் என்பதில் சந்தேகம் இல்லை.

கேப்டன் மாற்றம்

கேப்டன் மாற்றம்

ஒருவேளை இந்த தொடரின் முடிவில் ரோஹித் சர்மாவை டி20 அணியின் கேப்டனாக நிரந்தரமாக நியமிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தாலும் ஆச்சரியம் இல்லை. அதை நினைத்து தான் கோலி ஓய்வில்லாமல் விளையாடி வந்தாரோ? என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.

இந்திய டி20 அணி

இந்திய டி20 அணி

இந்திய டி20 அணி - ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வாஷிங்க்டன் சுந்தர், க்ருனால் பண்டியா, சாஹல், ராகுல் சாஹர், தீபக் சாஹர், கலீல் அஹ்மது, சிவம் துபே, ஷர்துல் தாக்குர்

Story first published: Thursday, October 24, 2019, 18:47 [IST]
Other articles published on Oct 24, 2019
English summary
IND vs BAN : Virat Kohli taken rest himself and Rohit Sharma made Captain for Bangladesh series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X