For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியை காப்பி அடித்த ஹர்திக்.. வாயடைத்துப்போன செய்தியாளர்கள்.. குறிப்பிட்டு காட்டியுள்ள அஸ்வின்!

ஆக்லாந்து: நியூசிலாந்து அணியுடனான தொடரின் போது ஹர்திக் பாண்ட்யா செய்த விஷயம் தோனியை அப்படியே உரித்துவைத்தது போன்று அமைந்துள்ளது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது. ஹர்திக் பாண்ட்யா தலைமையில் 1 - 0 என்ற புள்ளிக்கணக்கில் கோப்பையை வென்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா வருவதற்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

இந்தியா-நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டி.. எங்கு? எப்படி பார்ப்பது? இந்திய நேரம் என்ன? முழு விவரம் இந்தியா-நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டி.. எங்கு? எப்படி பார்ப்பது? இந்திய நேரம் என்ன? முழு விவரம்

கேப்டன்சி விவகாரம்

கேப்டன்சி விவகாரம்

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு, மோசமாக வெளியேறியது. இதனையடுத்து ரோகித் சர்மா கேப்டன்சியில் இருந்து விலக பிசிசிஐ அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது. ஏனென்றால் 35 வயதாகும் ரோகித், இனி 3 வடிவ கிரிக்கெட்டையும் பார்க்க முடியாது என்பதால் ஹர்திக் பாண்ட்யாவை அடுத்த டி20 கேப்டனாக அறிவிக்க முடிவெடுத்துள்ளனர். இதற்கான சோதனை முயற்சி தான் நியூசிலாந்து தொடர்.

சஞ்சு சாம்சன் விவகாரம்

சஞ்சு சாம்சன் விவகாரம்

இந்நிலையில் கேப்டன்சியில் தோனியை வெளிப்படுத்தியுள்ளார் பாண்ட்யா. செய்தியாளர் சந்திப்பின் போது சஞ்சு சாம்சனுக்கு ஏன் வாய்ப்பு தரவில்லை எனக்கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், சஞ்சுவுக்கு தெரியும், தனிப்பட்ட காரணங்களால் அவரை ஒதுக்கவில்லை. சூழலுக்கு ஏற்ப தான் ப்ளேயிங் 11-ஐ தேர்வு செய்ய முடியும். நான் வீரர்களின் கேப்டனாக இருக்க தான் விரும்புகிறேன்.

வீரர்களின் கேப்டன் நான்

வீரர்களின் கேப்டன் நான்

எனது உதவி தேவை என இந்திய அணியில் யார் நினைத்தாலும், நான் உடனே சென்று நிற்பேன். வீரர்கள் அனைவருக்குமே தெரியும், எனது அறையின் கதவுகள் எப்போதுமே திறந்திருக்கும். ஏதாவது பேசவேண்டும் என்றால், நேரடியாக என்னிடம் வந்து கலந்து பேசலாம். ஏனென்றால் அவர்களின் உணர்வுகள் எனக்கு நன்றாக புரியும். அனைவருக்கும் நான் சமமானவன் எனக்கூறினார்.

தோனியின் ஸ்டைல்

தோனியின் ஸ்டைல்

இது முற்றிலும் தோனியின் வசனம் ஆகும். தோனி கேப்டனாக இருந்த போதும், பெரும்பாலும் தனது அறையின் கதவுகளை மூடி வைக்க மாட்டார். வீரர்கள் தன்னிடம் வந்து நேரத்தை செலவளிக்க அவர் விரும்புவார். வீரர்களின் கேப்டனாக அவர் இருந்தார். அதே போன்று தான் தற்போது ஹர்திக் பாண்ட்யாவும் கூறியிருக்கிறார். இதனால் அவரை காப்பி அடிக்கிறாரா? என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அஸ்வின் பாராட்டு

அஸ்வின் பாராட்டு

இதுகுறித்து அஸ்வினும் பேசியிருக்கிறார். அதில், தல தோனியின் ஸ்டைலை பயன்படுத்த வேண்டும் என ஹர்திக் பாண்ட்யா நினைத்தாரா என்று தெரியவில்லை. ஏனென்றால் தோனியும் இப்படி தான் கூறுவார். தோனியும் பாண்ட்யாவும் மிகவும் நெருங்கியவர்கள் என்பது அனைவருக்குமே தெரியும். முக்கிய கேள்விகளை சரியாக பதில் கொடுத்து அசத்துகிறார். பாராட்டியே ஆக வேண்டும் என அஸ்வின் கூறியுள்ளார்.

Story first published: Friday, November 25, 2022, 9:56 [IST]
Other articles published on Nov 25, 2022
English summary
Ravichandran Ashwin points out that Hardik pandya copying Dhoni's Style in Captaincy on India vs new zealand series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X