வேற ஆளே இல்லை.. அவரை கூப்பிடுங்க.. கடும் சிக்கலில் கோலி.. வசமாக மாட்டிக் கொண்ட இந்திய அணி!

கிறைஸ்ட்சர்ச் : நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இஷாந்த் சர்மாவுக்கு பதிலாக உமேஷ் யாதவ்வை ஆட வைக்க இருக்கிறார் கேப்டன் கோலி.

இஷாந்த் சர்மா காயம் மற்றும் வலி காரணமாக பயிற்சியில் ஈடுபடவில்லை. அவரை இரண்டாவது போட்டியில் இருந்து நீக்க உள்ளது இந்திய அணி.

இந்த நிலையில், அவருக்கு மாற்றாக உத்தேச அணியில் இருக்கும் ஒரே அனுபவ வீரர் உமேஷ் யாதவ் தான். அவரது பந்துவீச்சு குறித்து சந்தேகம் இருந்தாலும் அவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் கோலி.

முதல் டெஸ்ட் தோல்வி

முதல் டெஸ்ட் தோல்வி

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வெல்லிங்க்டன் மைதானத்தில் நடை பெற்றது. அந்தப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்தது. தொடரில் 0 - 1 என பின்தங்கி உள்ளது.

வெற்றி அவசியம்

வெற்றி அவசியம்

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வென்றால் தொடரை இந்திய அணியால் சமன் செய்ய முடியும். ஏற்கனவே, ஒருநாள் தொடரை 3 - 0 என இழந்துள்ளதால், டெஸ்ட் தொடரையும் இழந்தால் கடும் விமர்சனத்தை எதிர் கொள்ள வேண்டி வரும். எனவே, அடுத்த டெஸ்டில் வெற்றி அவசியம்.

இஷாந்த் சர்மா காயம்

இஷாந்த் சர்மா காயம்

இந்த நிலையில் தான் முக்கிய வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா காலில் காயம் காரணமாக வலி ஏற்பட்டு, பயிற்சியில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். முதல் டெஸ்டில் இந்திய அணியில் சிறப்பாக செயல்பட்ட ஒரே வீரர் அவர் தான். அந்தப் போட்டியில் அவர் 68 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார்.

ஆட முடியாத நிலை

ஆட முடியாத நிலை

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இஷாந்த் சர்மாவை நீக்கும் முடிவில் இருக்கிறது இந்திய அணி. ஒருவேளை அவரை அந்தப் போட்டியில் ஆட வைத்துஅவர் பாதியில் விலகினால் அது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால், அவர் நிச்சயம் அணியில் இடம் பெற மாட்டார் என்றே தெரிகிறது.

இரு மாற்று வீரர்கள்

இரு மாற்று வீரர்கள்

இந்திய அணியில் நவ்தீப் சைனி, உமேஷ் யாதவ் என இரு மாற்று வேகப் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் உமேஷ் யாதவ் மட்டுமே அனுபவம் உள்ள பந்துவீச்சாளர். நவ்தீப் சைனி இளம் வீரர் என்பதால் முக்கியமான இரண்டாவது போட்டியில் அவர் இடம் பெற வாய்ப்பு குறைவு.

பயிற்சியாளர் ரவி சாஸ்திரி

பயிற்சியாளர் ரவி சாஸ்திரி

வலைப் பயிற்சியின் போது தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் இருவரும், உமேஷ் யாதவ்விடம் நீண்ட நேரம் உரையாடினர். அதை வைத்து பார்க்கும் போது அவரைத் தான் அணியில் தேர்வு செய்ய இருப்பதாக தெரிகிறது.

இந்திய மண்ணில் அசத்தல்

இந்திய மண்ணில் அசத்தல்

உமேஷ் யாதவ் இந்திய மண்ணில் கில்லியாக இருந்தாலும், வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் தடுமாறி வருகிறார். கடந்த ஆண்டு இந்திய மண்ணில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் அவர் 13 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அதன் பந்துவீச்சு சராசரி 13.65 ஆகும்.

வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகள்

வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகள்

அவர் 17 வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் 46 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தி உள்ளார். அதன் பந்து வீச்சு சராசரி 42.19 ஆகும். அதன் காரணமாகவே அவருக்கு வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் அதிகமாக வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும், நியூசிலாந்து டெஸ்டில் அவருக்கு வாய்ப்பு கிடைக்க உள்ளது.

சிக்கலில் கோலி

சிக்கலில் கோலி

உமேஷ் யாதவ்வை பயன்படுத்த விரும்பாவிட்டாலும், வேறு வழியின்றி கேப்டன் கோலி அவரை ஆட வைக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். உமேஷ் யாதவ் ஒருவேளை இந்த டெஸ்டில் சிறப்பாக ஆடலாம் என ரசிகர்கள் நேர்மறையாக கருத்து கூறி வருகின்றனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IND vs NZ : Will Umesh Yadav perform good in New Zealand pitches?
Story first published: Friday, February 28, 2020, 17:29 [IST]
Other articles published on Feb 28, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X