For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி நாளில் மிரட்டும் மழை.. போட்டியை இன்றே முடிக்க கோலி திட்டம்!! என்ன செய்ய போறாங்க தெரியுமா?

சென்சூரியன்: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது..

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 327 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 197 ரன்களில் சுருண்டது

2021ஆம் ஆண்டின் டாப் 5 இந்திய பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்..!! முதலிடம் யாருக்கு?2021ஆம் ஆண்டின் டாப் 5 இந்திய பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்..!! முதலிடம் யாருக்கு?

130 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், இந்திய அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது.

ஆடுகளம் செயல்பாடு

ஆடுகளம் செயல்பாடு

செஞ்சூரியன் ஆடுகளம் எப்போதும் முதல் 2 நாட்கள் தொய்வாக காணப்படும். அப்போது பேட்டிங் செய்ய லாவகமாக இருக்கும். ஆனால் கடைசி 3 நாட்கள் போக போக ஆடுகளம் வேகம் பிடிக்கும். அப்போது பந்துவீச்சாளர்களுக்கு தேன் நிலவு காலம் தான்.. சரியான லெங்த் லைனில் பந்துவீசினால் பேட்மேன்களுக்கு நகரம் தான்.

மழைக்கு வாய்ப்பு

மழைக்கு வாய்ப்பு

இதனால் இந்திய அணி பேட்ஸ்மேன்களால் 43 ரன்கள் மட்டுமே தாக்கு பிடிக்க முடிந்தது. கைவசமிருந்த 9 விக்கெட்டுடையும் பறி கொடுத்தது. தற்போது 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி கடைசி இன்னிங்சில் விளையாடி வருகிறது. இந்த நிலையில், கடைசி நாள் ஆட்டத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் என கணிக்கப்பட்டுள்ளது.

கோலி திட்டம்

கோலி திட்டம்

குறிப்பாக மதிய நேரத்திற்கு மேல் தான் கண்டிப்பாக மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் வாய்ப்பு பாதிக்கப்படும் என்பதால், போட்டியை இன்றே முடிக்க விராட் கோலி திட்டமிட்டுள்ளார். கடைசி நாளை மறந்துவிடுங்கள். இன்று 40 ஓவர்களுக்கு மேல் நம்மால் பந்துவீச முடியும். இந்த ஓவர்களில் நாம் 10 விக்கெட்டையும் எடுக்க வேண்டும் என்று விராட் கோலி பேசியுள்ளார்.

ரிவர்ஸ் ஸ்விங்

ரிவர்ஸ் ஸ்விங்

அதற்கு இந்திய அணி ஒரு பிளானையும் போட்டுள்ளது. பும்ராவை ஒரு முனையிலும், ஷமியை மறுமுனையிலும் வைத்து தொடர்ந்து நெருக்கடி தர முடியும். குறிப்பாக ஸ்டம்புகள் மற்றும் 4th stump லைனில் பந்துவீச வேண்டும் என்பதே பிளான். பந்து கொஞ்சம் பழசாகிவிட்டால் ரிவர்ஸ் ஸ்விங்கை கையாள கோலி அறிவுறுத்தியுள்ளார்.

பார்ட்னர்ஷிப்

பார்ட்னர்ஷிப்

தென்னாப்பிரிக்க அணியை பொறுத்தவரை, முதல் 20 ஓவர்களுக்கு விக்கெட்டை பறிகொடுக்காமல் விளையாடிவிட்டு, பின்னர் நல்ல பார்ட்னர்ஷிப்கள் அமைத்து வெற்றிக்கு அருகிலோ அல்லது மழை பெய்தால் போட்டி டிரா செய்யவோ திட்டமிட்டுள்ளது. இதில் யார் யுத்தி வெற்றி பெறுகிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். செஞ்சூரியனில் இதுவரை கடைசி இன்னிங்சில் வெற்றிக்கரமாக துரத்தப்பட்ட இலக்கு 249 தான். அதனை விட தற்போது இந்திய அணி அதிக ரன்களை தான் இலக்காக நிர்ணயித்துள்ளது.

Story first published: Wednesday, December 29, 2021, 19:35 [IST]
Other articles published on Dec 29, 2021
English summary
Ind vs SA 1st Test Day 1-Virat Kohli set Plan to win the centurion test போட்டியை இன்றே முடிக்க விராட் கோலி திட்டமிட்டுள்ளார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X