தயவுசெய்து இவங்களை பிரிச்சுடாதீங்க கோலி.. கும்ப்ளே, ஹர்பஜனை தூக்கி சாப்பிட்ட பலே கூட்டணி!

Ashwin, jadeja proved as best spin pair | கும்ப்ளே, ஹர்பஜனை முந்திய அஸ்வின்-ஜடேஜா-வீடியோ

மும்பை : இந்திய டெஸ்ட் அணியில் சிறந்த சுழற் பந்துவீச்சாளர்கள் கூட்டணி எது என்பது பற்றிய புள்ளி விவரம் வெளியாகி வியக்க வைத்துள்ளது.

அஸ்வின் - ஜடேஜா இணைந்து டெஸ்ட் அணியில் ஆடிய போது எத்தனை விக்கெட்கள் வீழ்ந்தன, அனில் கும்ப்ளே - ஹர்பஜன் சிங் இணைந்து பந்து வீசிய போது எத்தனை விக்கெட்கள் வீழ்ந்தன, எத்தனை போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது என்பது பற்றிய புள்ளி விவரம் ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது.

ஒரே அணியில்..

ஒரே அணியில்..

கேப்டன் கோலி கடந்த ஆண்டில் அஸ்வின் - ஜடேஜா இருவரையும் ஒரே நேரத்தில் அணியில் ஆட வைப்பதில்லை. தென்னாப்பிரிக்க தொடரில் தான் அஸ்வின் - ஜடேஜா இருவரும் இணைந்து பங்கேற்றனர். இருவரும் முதல் டெஸ்டில் அபாரமாக ஆடி விக்கெட் வேட்டை நடத்தினர்.

முதல் டெஸ்டில் என்ன நடந்தது?

முதல் டெஸ்டில் என்ன நடந்தது?

முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் அஸ்வின் 7 விக்கெட்கள் வீழ்த்தினார். அது அவரது ஐந்தாவது சிறந்த டெஸ்ட் பந்துவீச்சு ஆகும். இரண்டாம் இன்னிங்க்ஸில் ஒரு விக்கெட் வீழ்த்திய அஸ்வின் அதி விரைவாக 350 டெஸ்ட் விக்கெட்கள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் முத்தையா முரளிதரனுடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டார்.

ஜடேஜா 6 விக்கெட்

ஜடேஜா 6 விக்கெட்

ஜடேஜா முதல் இன்னிங்க்ஸில் 2 விக்கெட்களும், இரண்டாம் இன்னிங்க்ஸில் 4 விக்கெட்களும் வீழ்த்தினார். அதிலும் ஒரே ஓவரில் 3 விக்கெட்கள் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணியை தோல்வியின் விளிம்புக்கு அழைத்துச் சென்றார்.

டெஸ்ட் வெற்றிகள்

டெஸ்ட் வெற்றிகள்

அஸ்வின் - ஜடேஜா சேர்ந்து 33 டெஸ்ட் போட்டிகளில் ஆடி உள்ளனர். அதில் இந்திய அணி 25 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று இருக்கிறது. வேறு எந்த சுழற் பந்துவீச்சாளர்கள் கூட்டணியும் இவர்கள் அளவுக்கு வெற்றிகள் பெறவில்லை.

கும்ப்ளே - ஹர்பஜன் வெற்றிகள்

கும்ப்ளே - ஹர்பஜன் வெற்றிகள்

இந்திய அணியில் அதிக டெஸ்ட் விக்கெட்கள் குவித்துள்ள அனில் கும்ப்ளே - ஹர்பஜன் சிங் இருவரும் இணைந்து 54 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். அவற்றில் 21 வெற்றிகளை மட்டுமே அவர்கள்

சொந்த மண்ணில்..

சொந்த மண்ணில்..

சொந்த மண்ணில் நடந்த போட்டிகளில் அஸ்வின் - ஜடேஜா இருவரும் இணைந்து 29 டெஸ்ட் போட்டிகளில் 22 வெற்றிகள் பெற்றுள்ளனர். மேலும், இருவரும் சேர்ந்து 329 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தி உள்ளனர்.

கும்ப்ளே - ஹர்பஜன் விக்கெட்கள்

கும்ப்ளே - ஹர்பஜன் விக்கெட்கள்

இந்திய மண்ணில் அனில் கும்ப்ளே - ஹர்பஜன் சிங் ஜோடி இணைந்து 34 போட்டிகளில் ஆடி 356 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளனர். மேலும், 14 வெற்றிகள் மட்டுமே பெற்றுள்ளனர்.

பவுலிங் சராசரி

பவுலிங் சராசரி

அஸ்வின் - ஜடேஜா கூட்டணியின் பவுலிங் சராசரி 21.29 மற்றும் பவுலிங் ஸ்ட்ரைக் ரேட் 51.91 ஆகும். அனில் கும்ப்ளே - ஹர்பஜன் சிங் கூட்டணியின் பவுலிங் சராசரி 27.23 மற்றும் பவுலிங் ஸ்ட்ரைக் ரேட் 62.63.

சிறந்த கூட்டணி

சிறந்த கூட்டணி

டெஸ்ட் போட்டிகளில் அனில் கும்ப்ளே - ஹர்பஜன் சிங்கை விட சிறந்த ஜோடி என்பதை அஸ்வின் - ஜடேஜா நிரூபித்துள்ளனர். மேலும், இருவருமே நல்ல பேட்டிங் செய்யும் திறன் பெற்றவர்கள் என்பது அணிக்கு கூடுதல் பலம்.

கேப்டன் மனது வைக்க வேண்டும்

கேப்டன் மனது வைக்க வேண்டும்

எனினும், இவர்கள் இருவரும் சேர்ந்து அணியில் இடம் பெறுவது குறைந்து வருகிறது. கேப்டன் கோலி அடுத்த கட்ட சுழற் பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ்வை கடந்த காலங்களில் பயன்படுத்தி உள்ளார் அல்லது அஸ்வின் அல்லது ஜடேஜா மட்டுமே அணியில் இடம் பெற்று வந்தனர். வெற்றிக் கூட்டணியான அஸ்வின் - ஜடேஜாவுக்கு டெஸ்ட் அணியில் தொடர்ந்து வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IND vs SA : Ashwin - Ravindra Jadeja proved to be the best spin pair in India beating Anil Kumble and Harbhajan Singh of past.
Story first published: Tuesday, October 8, 2019, 20:53 [IST]
Other articles published on Oct 8, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X