For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாருப்பா அது? அவரை மாதிரி ஒருத்தரை நான் பார்த்ததே இல்லை.. வித்தை காட்டிய வீரர்.. வியந்த கோலி!

Recommended Video

விக்கெட் வேட்டை நடத்திய ஷமியின் ரகசியம்..ரோஹித் சொன்ன விஷயம் | Rohit sharma about mohammed shami

புனே : தென்னாப்பிரிக்க தொடரில் இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஒருவரை கண்டு கேப்டன் கோலி வியந்து போய் இருக்கிறார்.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முகமது ஷமி வேகப் பந்துவீச்சுக்கு கடினமான பிட்ச்சில் கூட தன் வித்தையை காட்டி விக்கெட் வேட்டை நடத்தினார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பேட்டி அளித்த கோலி, பொறுப்பான வீரர் என ஷமியை புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.

முதல் டெஸ்ட் வெற்றி

முதல் டெஸ்ட் வெற்றி

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றி தேடித் தந்தனர். ஷமி அந்தப் போட்டியில் இரண்டாம் இன்னிங்க்ஸில் அசத்தலாக பந்து வீசி இருந்தார்.

கடினமான ஆடுகளம்

கடினமான ஆடுகளம்

முதல் டெஸ்ட் நடைபெற்ற ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கூறப்பட்டது. எனினும், ஆடுகளம் பந்துவீச்சுக்கு கடினமாக இருந்தது. பேட்டிங் செய்யவே அதிகம் ஒத்துழைத்தது.

ஷமி மிரட்டல்

ஷமி மிரட்டல்

இந்த நிலையில், இரண்டாம் இன்னிங்க்ஸில், கடைசி நாளில் தென்னாப்பிரிக்க அணியின் ஒன்பது விக்கெட்களை வீழ்த்தினால் தான் வெற்றி கிடைக்கும் என்ற நிலையில், ஷமி 5 விக்கெட்களை சாய்த்து மிரட்டினார்.

இரண்டாம் இன்னிங்க்ஸ் நாயகன்

இரண்டாம் இன்னிங்க்ஸ் நாயகன்

இரண்டாம் இன்னிங்க்ஸில் எப்போதும் ஷமி சிறப்பாக செயல்படுவார் என்ற பெயரை இந்தப் போட்டியின் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபித்தார் அவர். அவரது ரிவர்ஸ் ஸ்விங் வித்தை தான் அவர் விக்கெட் வேட்டை நடத்த முக்கிய காரணம்.

கோலி என்ன சொன்னார்?

கோலி என்ன சொன்னார்?

இது குறித்து இரண்டாம் டெஸ்ட் போட்டிக்கு முன் பேசிய கேப்டன் கோலி, ஷமி பொறுப்புகளை தானே எடுத்துக் கொள்கிறார். அவர் மாதிரி பந்து வீசிய ஒருவரை நான் பார்த்ததே இல்லை என பாராட்டி தள்ளி இருக்கிறார்.

பொறுப்பு

பொறுப்பு

கோலி கூறுகையில், "தற்போது ஷமி பொறுப்புகளை தானே எடுத்துக் கொள்கிறார். ஷமியை நாங்கள் இன்னும் வற்புறுத்த வேண்டியதில்லை. "தற்போது எங்களுக்காக பந்து வீசுங்கள்" என நாங்கள் கேட்க வேண்டியதில்லை.

அவரை மாதிரி..

அவரை மாதிரி..

அவருக்கு பந்து வேண்டும். அவரிடம் பந்தை கொடுத்தால் அவர் சூழ்நிலையை புரிந்து கொள்வார். இப்போது நாங்கள் ஆடும் பிட்ச்களில் அவரை தவிர வேறு யாரும் இத்தனை "சீம் மூவ்மென்ட்" செய்து நான் பார்த்ததே இல்லை.

போட்டியை மாற்றுவார்

போட்டியை மாற்றுவார்

போட்டிகளில் வாய்ப்பு இருப்பதை நாம் பார்க்காத போது, அவர் போட்டியை மொத்தமாக மாற்றி விடுவார். அவரது திறமையை நாம் எல்லோரும் பார்க்கலாம். குறிப்பாக, இரண்டாம் இன்னிங்க்ஸில் சூழ்நிலைகள் கடினமாக இருக்கும் போது ஒவ்வொரு முறையும் அவர் வருவார், வேலையை முடிப்பார் என்று பாராட்டினார் கோலி.

உலகக்கோப்பையில் வாய்ப்பு

உலகக்கோப்பையில் வாய்ப்பு

இதே ஷமிக்கு உலகக்கோப்பை தொடரில் விக்கெட் வேட்டை நடத்திய போதும் தொடர் வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது ஷமி மீது கோலிக்கு நம்பிக்கை இல்லை என விவாதிக்கப்பட்டது.

பும்ரா இல்லை

பும்ரா இல்லை

ஆனால், தற்போது அணியில் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் பும்ரா இல்லாத நிலையில், ஷமி முக்கியத்துவம் பெற்றுள்ளார். தன் ரிவர்ஸ் ஸ்விங் வித்தையால் எல்லோரையும் கவர்ந்துள்ளார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அவரை சமாளிக்குமா?

Story first published: Thursday, October 10, 2019, 15:02 [IST]
Other articles published on Oct 10, 2019
English summary
IND vs SA : I don’t see anyone with so much seam movement, Kohli praises Shami. In first test, Shami took 5 wickets in second innings with his reverse swing ability.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X