For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2 வருஷமா நம்ப வைச்சு ஏமாத்திட்டாங்க.. சொல்ல முடியாத ரகசியத்தை நாசூக்காக போட்டு உடைத்த அதிரடி வீரர்!

Recommended Video

Rohit sharma reveals secret | சொல்ல முடியாத ரகசியத்தை நாசூக்காக போட்டு உடைத்த ரோஹித்-வீடியோ

விசாகப்பட்டினம் : இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே டெஸ்ட் போட்டியில் தன்னை துவக்க வீரராக களமிறக்கப் போவதாக கூறினார்கள் என்ற ரகசியத்தை சரியான நேரம் பார்த்து போட்டு உடைத்துள்ளார் ரோஹித் சர்மா.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா இரண்டு இன்னிங்க்ஸிலும் சதம் அடித்தார்.

போட்டு உடைத்தார்

போட்டு உடைத்தார்

போட்டியின் வெற்றிக்குப் பின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ரோஹித் சர்மா தன் வெற்றி ரகசியம் பற்றி கூறுகையில் சந்தடியில் இரண்டு வருடத்திற்கு முன்பு நடந்ததை நாசூக்காக போட்டு உடைத்தார்.

டெஸ்ட் அணியில் இடம் இல்லை

டெஸ்ட் அணியில் இடம் இல்லை

ரோஹித் சர்மா இந்த விஷயத்தை போட்டு உடைக்க காரணம், அவருக்கு டெஸ்ட் அணியில் சரியான வாய்ப்பு அளிக்கப்படவில்லை. மிக மோசமாக அலைகழிக்கப்பட்டார் என்பதே ஆகும். 2016இல் ஒரு நீண்ட இடைவெளி, 2018இல் மூன்று டெஸ்ட் தொடர்களில் வாய்ப்பு மறுப்பு என தவித்தார் ரோஹித்.

மிடில் ஆர்டர் வீரர்

மிடில் ஆர்டர் வீரர்

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் துவக்க வீரராக ஆடும் ரோஹித் சர்மா, டெஸ்ட் அணியில் மட்டும் மிடில் ஆர்டர் வீரராக ஆடி வருகிறார். முதலில் அது சரியாக இருந்தாலும், பின்னர் அவரால் மிடில் ஆர்டரில் தொடர்ந்து சிறப்பாக ரன் குவிக்க முடியவில்லை.

முன்னாள் வீரர்கள் கருத்து

முன்னாள் வீரர்கள் கருத்து

முன்னாள் வீரர்கள் பலரும் டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா துவக்க வீரராக களமிறங்க வேண்டும் என பல வருடங்களாக கூறி வருகின்றனர். ஆனால், அவரை மிடில் ஆர்டர் வீரராக மட்டுமே நடத்திய இந்திய அணி நிர்வாகம், அவரது பார்ம் சரியில்லை என்று 2016இல் வாய்ப்பு மறுத்தது.

2017 இலங்கை தொடர்

2017 இலங்கை தொடர்

அதன் பின் 2017 இலங்கை தொடரில் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் பெற்றார் ரோஹித். அப்போது இரண்டு போட்டிகளில் ஒரு சதம், இரண்டு அரைசதம் அடித்தார். தொடர்ந்து தென்னாப்பிரிக்க தொடரில் ஆடினார்.

மீண்டும் வாய்ப்பு மறுப்பு

மீண்டும் வாய்ப்பு மறுப்பு

தென்னாப்பிரிக்க தொடரில் ரோஹித் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. அதை அடுத்து அவரை அணியில் இருந்தே நீக்கினார்கள். இலங்கை, தென்னாப்பிரிக்கா தொடர்களுக்கு முன்பு தான் அவரை துவக்க வீரராக களமிறக்கப் போவதாக அணி நிர்வாகம் கூறி இருக்கும் என கருதப்படுகிறது.

துவக்க வீரர் பயிற்சி

துவக்க வீரர் பயிற்சி

அப்போது சொன்ன அந்த வார்த்தையை நம்பி ரோஹித் சர்மா கடந்த இரு ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் எப்படி துவக்கம் அளிப்பது என வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வந்ததாகவும், அதனால் தான் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் முதன் முறையாக துவக்க வீரராக ஆடினாலும், சிறப்பாக ரன் குவிக்க முடிந்தது என்று கூறினார்.

இரண்டு சதம் அடித்தார்

இரண்டு சதம் அடித்தார்

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் சதம் அடித்து அசத்திய ரோஹித் சர்மா பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளார். துவக்க வீரராக முதல் போட்டியில் தன் முத்திரையை பதித்தார்.

என்ன சொன்னார் ரோஹித்?

என்ன சொன்னார் ரோஹித்?

போட்டிக்குப் பின் ரோஹித் சர்மா பேசியது இது தான் - "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒருநாள் துவக்கம் அளிக்க வேண்டி இருக்கும் என்று கூறினார்கள். அதனால், வலைப் பயிற்சியில் கூட நான் புதிய பந்தில் பயிற்சி எடுத்து வந்தேன். அதனால் இது எனக்கு ஆச்சரியமாக இல்லை" என்றார்.

காரணம் யார்?

காரணம் யார்?

ரோஹித் சர்மா இத்தனை நாள் இது பற்றி பேசாமல் இருந்தாலும், சதம் அடித்து நிரூபித்து சரியான நேரத்தில் பெயர் சொல்லாமல் கோலி, ரவி சாஸ்திரி தன்னிடம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே துவக்க வீரராக இறங்குவீர்கள் எனக் கூறி, பின் வாய்ப்பு அளிக்காமல் இருத்ததை போட்டு உடைத்துள்ளார்.

Story first published: Monday, October 7, 2019, 11:23 [IST]
Other articles published on Oct 7, 2019
English summary
IND vs SA : Rohit Sharma reveals he was told 2 years back by the team management. But, they never gave him the chance to open in tests.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X