For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த மேட்டரை இனிமே நாங்களே பார்த்துக்குறோம்.. கோலி, ரவி சாஸ்திரிக்கு “நோ”.. பிசிசிஐ அதிரடி உத்தரவு!

மும்பை : இந்திய வீரர்களின் மனைவி மற்றும் தோழிகள் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் வீரர்கள் உடன் இருப்பது பற்றிய முடிவை இனி பிசிசிஐ அதிகாரிகளே எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்த விஷயத்தில் முடிவு எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டு இருந்தது.

அதை ரத்து செய்துள்ளது கங்குலி தலைமையில் அமைந்துள்ள புதிய பிசிசிஐ நிர்வாகம்.

 மாஸ்டர்பிளான்!! இந்தியா - இலங்கை டி20 போட்டியை வைத்து ஐபிஎல் அணி போட்ட திட்டம்.. வெளியான ரகசியம்! மாஸ்டர்பிளான்!! இந்தியா - இலங்கை டி20 போட்டியை வைத்து ஐபிஎல் அணி போட்ட திட்டம்.. வெளியான ரகசியம்!

என்ன விதி?

என்ன விதி?

முன்னதாக இந்திய அணி வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது முதல் இரண்டு வாரங்கள் வீரர்களின் மனைவி, தோழிகள் மற்றும் குடும்பத்தினரை உடன் தங்க வைத்துக் கொள்ளக் கூடாது என்ற விதிமுறை இருந்தது.

பிசிசிஐ முடிவு

பிசிசிஐ முடிவு

சில வீரர்கள் நிர்ணயிக்கப்பட்ட காலத்தை விட கூடுதலாக தங்கள் குடும்பத்தினரை உடன் வைத்துக் கொள்ள விரும்பினர். அது முந்தைய பிசிசிஐ நிர்வாக கமிட்டிக்கு தலைவலியாக மாறியது.

கேப்டனுக்கு அதிகாரம்

கேப்டனுக்கு அதிகாரம்

இதையடுத்து கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வீரர்களின் கோரிக்கைகளுக்கு சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

வெடித்த சர்ச்சை

வெடித்த சர்ச்சை

இது சரியான முடிவல்ல, இதனால் அணிக்குள் குழப்பம் வரலாம் என அப்போதே கூறப்பட்டது. எனினும், இந்த அதிகாரம் கோலி, ரவி சாஸ்திரி கைக்கு வந்தது. அதன் பின் இந்தியா உலகக்கோப்பை தொடருக்கு சென்றது.

ரோஹித் சர்மா விவகாரம்

ரோஹித் சர்மா விவகாரம்

உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா, தன் குடும்பத்தினரை தொடர் முழுவதும் வைத்திருக்க விரும்பியதாகவும், அதனால் அணியில் கோலி - ரோஹித் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்ததாகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

உலகக்கோப்பை முடிந்த பின் இந்த விவகாரம் பெரிதாக வெடித்தது. அப்போது கேப்டன், பயிற்சியாளர் வசம் இந்த அதிகாரம் இருப்பது தவறு என்ற விமர்சனம் எழுந்தது.

பிசிசிஐ நிர்வாகம் எடுத்த முடிவு

பிசிசிஐ நிர்வாகம் எடுத்த முடிவு

இந்த நிலையில், கங்குலி தலைமையிலான புதிய பிசிசிஐ நிர்வாகம் மீண்டும் வீரர்கள் தங்கள் குடும்பத்தினரை கூடுதல் நாட்கள் தங்களுடன் தங்க வைக்க விரும்பினால் அது குறித்து பிசிசிஐ அதிகாரிகளிடம் அனுமதி பெறும் வகையில் விதி மாற்றம் செய்ய உள்ளது.

மாஸ்டர்பிளான்!! இந்தியா - இலங்கை டி20 போட்டியை வைத்து ஐபிஎல் அணி போட்ட திட்டம்.. வெளியான ரகசியம்!

நியூசிலாந்து சுற்றுப்பயணம்

நியூசிலாந்து சுற்றுப்பயணம்

இந்த முடிவை தற்போது எடுக்க முக்கிய காரணம் அடுத்து இந்திய அணி பங்கேற்க உள்ள நியூசிலாந்து சுற்றுப்பயணம் தான் என கூறப்படுகிறது. இந்த தொடர் ஜனவரி முடிவில் துவங்க உள்ளது.

நீண்ட தொடர்

நீண்ட தொடர்

டி20 தொடர், ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடர் சுமார் இரண்டு மாதங்கள் நியூசிலாந்து நாட்டில் தங்க உள்ளது இந்திய அணி. இந்த நேரத்தில் இந்திய வீரர்கள் தங்கள் குடும்பத்தினரை தங்களுடன் தங்க வைக்க நேரிடும்.

போட்டிகளில் கவனம்

போட்டிகளில் கவனம்

அப்போது உலகக்கோப்பை போல எந்த குழப்பமும் வராமல் இருக்கவே பிசிசிஐ தற்போது இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த முடிவால் இனி கேப்டனும், பயிற்சியாளரும், போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்த முடியும் என ஒரு பிசிசிஐ அதிகாரி கூறி இருக்கிறார்.

Story first published: Saturday, January 4, 2020, 15:23 [IST]
Other articles published on Jan 4, 2020
English summary
IND vs SL : BCCI officials will decide on WAG request from players. Hereafter, Captain and Coach won’t be involving in this issue.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X