For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கங்குலியை முந்திய கோலி.. போட்டி போடும் ரோஹித் சர்மா.. ஆனா சச்சினை மட்டும் தொட முடியாது!

லீட்ஸ் : இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பொறுப்பாக நின்று பேட்டிங் செய்த கோலி, முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியை முந்தி புதிய சாதனை ஒன்றை செய்துள்ளார்.

இந்தியா - இலங்கை இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டி லீட்ஸ் நகரில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் இந்தியா ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.

கோலி பேட்டிங்

கோலி பேட்டிங்

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 264 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா - ராகுல் அபார துவக்கம் அளித்தனர். இந்த ஜோடி 189 ரன்கள் குவித்தது. ரோஹித் சதம் அடித்து ஆட்டமிழந்த நிலையில், கோலி களமிறங்கினார். அவர் 34 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்று அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

அரைசதங்கள்

அரைசதங்கள்

இந்த உலகக்கோப்பை தொடரில் கோலி 8 இன்னிங்க்ஸ்களில் 442 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஐந்து அரைசதங்கள் அடங்கும். உலகக்கோப்பை தொடர்களில் ஒட்டுமொத்தமாக 25 இன்னிங்க்ஸ்களில் 1029 ரன்கள் குவித்துள்ளார்.

கங்குலியை முந்தினார்

கங்குலியை முந்தினார்

இதன் மூலம், இந்திய அளவில் உலகக்கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் கங்குலியை முந்தினார். கங்குலி 21 உலகக்கோப்பை இன்னிங்க்ஸ்களில் 1006 ரன்கள் எடுத்து இருந்தார். கோலி தற்போது கங்குலியை மூன்றான் இடத்திற்கு தள்ளி, இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

முதல் இடத்தில் சச்சின்

முதல் இடத்தில் சச்சின்

இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது சச்சின் டெண்டுல்கர். அவர் 44 இன்னிங்க்ஸ்களில் 2278 ரன்கள் குவித்துள்ளார். விராட் கோலி அந்த சாதனையை முறியடிக்க முடியுமா என்பது சந்தேகமே! கோலி 2000 உலகக்கோப்பை ரன்களை எட்ட இன்னும் இரு உலகக்கோப்பை தொடர்களில் ஆட வேண்டும்.

பின் தொடரும் ரோஹித் சர்மா

பின் தொடரும் ரோஹித் சர்மா

இந்தப் பட்டியலில் கோலியை மற்றொரு இந்திய வீரர் முந்தப் போகிறார். ரோஹித் சர்மா 16 இன்னிங்க்ஸ்களில் 977 ரன்கள் குவித்துள்ளார் இந்தியா அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் பங்கேற்க உள்ள நிலையில், கோலி, ரோஹித் இருவரும் மேலும் ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது. ரோஹித், கோலியை முந்தவும் வாய்ப்புள்ளது.

Story first published: Sunday, July 7, 2019, 2:03 [IST]
Other articles published on Jul 7, 2019
English summary
IND vs SL Cricket World cup 2019 : Virat Kohli beat Sourav Ganguly in world cup
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X