அவர் இருக்குற வரைக்கும் இந்தியாவை வீழ்த்த முடியாது.. இலங்கை அணியின் படுமோசமான வரலாறு!

IND vs SL | Sri lanka never beaten India in bilateral series for past 12 years

கவுஹாத்தி : இந்தியா - இலங்கை இடையே ஆன டி20 தொடர் ஜனவரி 5 அன்று துவங்குகிறது.

இந்த நிலையில், இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் இலங்கை அணி கடைசியாக இந்தியாவை எப்போது வீழ்த்தியது? என்பது பற்றிய புள்ளிவிவரம் வெளியாகி இருக்கிறது.

கடந்த 12 ஆண்டுகளாக இந்தியாவுக்கு எதிரான இருதரப்பு கிரிக்கெட் தொடரை இலங்கை அணி வென்றதில்லை. இதற்கு ஒருவகையில் விராட் கோலியும் ஒரு முக்கிய காரணம் என்பதும் தெரிய வந்துள்ளது.

புதிய ஹேர்ஸ்டைலுடன் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளித்த விராட் கோலி

இந்தியா - இலங்கை தொடர்

இந்தியா - இலங்கை தொடர்

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் ஜனவரி 5 முதல் 10 வரை இந்திய மண்ணில் நடைபெற உள்ளது. 2020ஆம் ஆண்டில் இந்த இரு அணிகளும் பங்கேற்கும் முதல் கிரிக்கெட் தொடர் இது தான்.

இலங்கையின் மோசமான நிலை

இலங்கையின் மோசமான நிலை

இலங்கை அணி மிக மோசமான நிலையில் உள்ளது. கேப்டன் லசித் மலிங்கா மட்டுமே நம்பிக்கை அளிக்கும் வீரராக இருக்கிறார். ஒரு சில வீரர்கள் சில போட்டிகளில் சிறப்பாக ஆடினாலும் அந்த அணியால் வெற்றிகளை குவிக்க முடியவில்லை.

12 ஆண்டு வரலாறு

12 ஆண்டு வரலாறு

மேலும், அந்த அணி இந்திய அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரை வென்று பல ஆண்டுகள் ஆகி விட்டது. கடந்த 12 ஆண்டுகளாக இந்திய அணிக்கு எதிரான டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் இலங்கை வெற்றி பெற்றதில்லை.

கடைசி தோல்வி

கடைசி தோல்வி

இந்தியா கடைசியாக 2008இல் அனில் கும்ப்ளே தலைமையிலான இந்திய அணி இலங்கையிடம் டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்து இருந்தது. அதன் பின் நடந்த 18 டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இந்தியா 16 தொடர்களை கைப்பற்றி உள்ளது. இரண்டு தொடர்கள் டிராவில் முடிந்தன.

கிரிக்கெட் தொடர்களின் வெற்றிகள்

கிரிக்கெட் தொடர்களின் வெற்றிகள்

ஐந்து டெஸ்ட் தொடர்களில் நான்கில் வெற்றி, ஒன்றில் டிரா செய்துள்ளது இந்தியா. ஏழு ஒருநாள் தொடர்களில் பங்கேற்று அனைத்தையும் கைப்பற்றி உள்ளது. ஆறு டி20 தொடர்களில் ஐந்தில் இந்தியா வெற்றியும், ஒன்றில் டிராவும் செய்துள்ளது.

இந்தியா பெற்ற வெற்றிகள்

இந்தியா பெற்ற வெற்றிகள்

2008 முதல் இந்தியா 59 போட்டிகளில் இலங்கை அணியுடன் ஆடி உள்ளது. அதில் அதில் 44 வெற்றிகளும், 10 தோல்விகளும் சந்தித்துள்ளது. ஐந்து போட்டிகளில் முடிவு தெரியவில்லை.

முக்கிய தோல்விகள்

முக்கிய தோல்விகள்

இந்தியா அடைந்த 10 தோல்விகளில் சில முக்கிய தொடர்களில் நடந்த தோல்விகளும் அடங்கும். 2014 டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அடைந்த தோல்வியும், 2017 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்தியா அடைந்த தோல்வியும் பெரிய பாதிப்பாக அமைந்தது.

காரணம் விராட் கோலி

காரணம் விராட் கோலி

இலங்கை அணிக்கு எதிரான, இந்தியாவின் இந்த வெற்றி நடை துவங்கிய அதே 2008இல் தான் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட் தொடரில் அறிமுகம் ஆனார். இலங்கை அணிக்கு எதிரான அவரது அசத்தல் ஆட்டங்களும் இந்த வெற்றிகளுக்கு முக்கிய காரணம்.

கோலி குவித்த ரன்கள்

கோலி குவித்த ரன்கள்

இலங்கை அணிக்கு எதிராக மூன்று வித போட்டிகளிலும் விராட் கோலி 3507 ரன்கள் குவித்துள்ளார். இதில் 13 சதங்கள் மற்றும் 17 அரைசதங்கள் அடங்கும். அவரது பேட்டிங் சராசரி 66.16. இலங்கைக்கு எதிராக 4 டி20 போட்டிகளில் கோலி 283 ரன்கள் எடுத்துள்ளார். இதன் சராசரி 94.33 ஆகும்.

இலங்கை வெற்றி பெறுமா?

இலங்கை வெற்றி பெறுமா?

இலங்கை அணியின் இந்த படுமோசமான வரலாறு அடுத்து நடக்க இருக்கும் டி20 தொடரிலும் தொடரும் என்றே விமர்சகர்கள் கருதுகின்றனர். எனினும், லசித் மலிங்கா தன் மேஜிக்கை காட்டினால், இலங்கை டி20 தொடரில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IND vs SL : Sri Lanka never beaten India in bilateral series till 2008. Virat Kohli is also one of the main reason behind this.
Story first published: Friday, January 3, 2020, 15:16 [IST]
Other articles published on Jan 3, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X