தோனி ரசிகர்கள் செய்த அந்த செயல்.. போட்டியில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்!

India vs West Indies 1st ODI | Dhoni fans supports Pant at Chennai

சென்னை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது.

இந்தப் போட்டியில் தோனி இடத்தை பிடித்த விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டுக்கு ஆதரவு அளித்து குரல் கொடுத்தனர் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள்.

சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் என்றால் அது தோனி ரசிகர்கள் தான். ஆனால், அவர்கள் அனைவரும் ரிஷப் பண்ட் பெயரை கோஷமிட்டு அவருக்கு ஆதரவு தெரிவித்தது நெகிழ வைக்கும் சம்பவமாக இருந்தது.

தோனிக்கு மாற்று வீரர்

தோனிக்கு மாற்று வீரர்

தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக அணியில் இணைந்தவர் தான் ரிஷப் பண்ட். உலகக்கோப்பை தொடருக்குப் பின் அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக மாறினார் பண்ட்.

தோனிக்கு வாய்ப்பு இல்லை

தோனிக்கு வாய்ப்பு இல்லை

அதே சமயம், பண்ட்டுக்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்த இந்திய அணி நிர்வாகம் தோனிக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. அவராகவே ஒதுங்கி இருப்பதாகவும் ஒரு பேச்சு உள்ளது. அவர் எதிர்காலம் தெளிவாக தெரியாத நிலையில், தோனி ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர்.

தடுமாறிய பண்ட்

தடுமாறிய பண்ட்

மறுபக்கம் ரிஷப் பண்ட்டுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தாலும் அவரால் போட்டிகளில் ரன் குவிக்க முடியவில்லை. அவர் பேட்டிங் மற்றும் கீப்பிங் இரண்டிலும் தடுமாறி வந்தார். அதனால், அவர் மீது விமர்சனம் எழுந்தது.

ரசிகர்கள் எதிர்ப்பு

ரசிகர்கள் எதிர்ப்பு

இந்தியா முழுவதும் எந்த மைதானத்தில் ஆடினாலும் ரிஷப் பண்ட் போட்டியில் சொதப்பினால், அங்கே இருக்கும் ரசிகர்கள், "தோனி, தோனி" என முழக்கமிடத் துவங்கினர். தோனியை மீண்டும் அணிக்கு அழைத்து வாருங்கள் என்ற கோஷமாக அது இருந்தது.

மனம் உடைந்த பண்ட்

மனம் உடைந்த பண்ட்

அந்த கோஷங்களால் மனம் உடைந்து காணப்பட்டார் ரிஷப் பண்ட். கேப்டன் கோலி, வெஸ்ட் இண்டீஸ் தொடர் துவங்கும் முன் ரசிகர்கள் தோனி பெயரைக் கூறி, இளம் வீரர் பண்ட்டை காயப்படுத்தக் கூடாது என கூறினார். எனினும், அந்த கோஷங்கள் தொடர்ந்து வந்தது.

சிஎஸ்கே ரசிகர்கள் ஆதரவு

இந்த நிலையில், சிஎஸ்கே ரசிகர்களின் அதிகாரப்பூர்வ அமைப்பு, சென்னை ஒருநாள் போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு ஆதரவு அளிக்க இருப்பதாகக் கூறி தோனி, [பண்ட் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தங்கள் ஆதரவை தெரிவித்து இருந்தனர்.

அரைசதம் அடித்த பண்ட்

அரைசதம் அடித்த பண்ட்

மைதானத்தில் தனக்கு ஆதரவுக் குரல்கள் கேட்க, ரிஷப் பண்ட் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். கோலி, ரோஹித் விரைவாக ஆட்டமிழந்த நிலையில், பொறுப்பாக ஆடிய பண்ட் 69 பந்துகளில் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

மைதானம் முழுக்க ஒலித்த பெயர்

அவர் ஆட்டமிழந்து வெளியேறிய போது சேப்பாக்கம் மைதானம் முழுவதும் "ரிஷப் பண்ட், ரிஷப் பண்ட்" என ரசிகர்கள் முழக்கமிட்டனர். அந்த காட்சி ரிஷப் பண்ட்டுக்காக பேசி வந்த ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது. பலரும் இணையத்தில் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினர்.

சென்னை மக்கள்

சென்னை மக்கள் எப்போதும் கிரிக்கெட் மைதானத்தில் கண்ணியமாக நடந்து கொள்வார்கள் என கூறப்பட்டு வந்த நிலையில், அதை உறுதிப் படுத்தும் வகையில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IND vs WI : CSK - Dhoni fans supports Rishabh Pant at Chennai
Story first published: Sunday, December 15, 2019, 20:20 [IST]
Other articles published on Dec 15, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X