For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே தப்பை திரும்ப திரும்ப செய்த குல்தீப்.. கோபத்தில் திட்டிய கோலி.. பரபர சம்பவம்!

கட்டாக் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. எனினும், இந்தப் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு சுமாராகவே அமைந்தது.

குல்தீப் யாதவ் பந்து வீசும் போது தன் கடைசி ஓவரில் எளிதாக சிக்ஸ் அடிக்கும் வகையில் திரும்ப திரும்ப வந்து வீசினார்.

அதைக் கண்ட கோலி கோபத்தில் அவர் அருகே சென்று திட்டினார். இந்த சம்பவம் போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வெ.இண்டீஸ் பேட்டிங்

வெ.இண்டீஸ் பேட்டிங்

மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 315 ரன்கள் குவித்தது. அந்த அணி முதல் 40 ஓவர்களில் 5 ரன்களுக்கும் குறைவாகவே ரன் அடித்து வந்தது.

விக்கெட் சரிவு

விக்கெட் சரிவு

வெஸ்ட் அணி வீரர்கள் எவின் லூயிஸ் 21, ஷாய் ஹோப் 42, ராஸ்டன் சேஸ் 38, ஷிம்ரான் ஹெட்மயர் 37 ரன்கள் அடித்தனர். 31.3 ஓவர்களில் 144 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது வெஸ்ட் இண்டீஸ்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

அடுத்து ஜோடி சேர்ந்த நிக்கோலஸ் பூரன், கீரான் பொல்லார்டு அதிரடி ஆட்டம் ஆடினர். கடைசி 10 ஓவர்களில் அந்த அணி அதிரடியாக ரன் குவித்தது. அப்போது தான் சிக்கினார் குல்தீப் யாதவ்.

குல்தீப் யாதவ் நிலை

குல்தீப் யாதவ் நிலை

குல்தீப் யாதவ் தான் வீசிய முதல் 9 ஓவர்களில் 51 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. 43வது ஓவரில் தன் 10வது ஓவரை வீசினார். அந்த ஓவரிலாவது விக்கெட் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருந்தார்.

பொல்லார்டு அடித்த சிக்ஸ்

பொல்லார்டு அடித்த சிக்ஸ்

அந்த ஓவரின் முதல் பந்தை ஸ்பின் செய்யாமல், தூக்கிப் போட்டார் குல்தீப் யாதவ். பந்து ஃபுல் லென்த்தில் பேட்ஸ்மேனை எட்டியது. பந்தை சந்தித்த பொல்லார்டு மிகப் பெரிய சிக்ஸ் அடித்தார்.

மீண்டும் அதே தவறு

மீண்டும் அதே தவறு

இரண்டாவது பந்தில் பொல்லார்டு ஒரு ரன் எடுத்தார். மூன்றாவது வ`பந்தை பூரன் சந்தித்தார். இந்த முறையும் ஃபுல் லென்த்தில் அவுட்சைட் ஆஃப் திசையில் பந்து வீசினார் குல்தீப் யாதவ்.

கடும் கோபம் அடைந்த கோலி

கடும் கோபம் அடைந்த கோலி

நிக்கோலஸ் பூரன் பந்தை அதிரடியாக சிக்ஸ் அடித்தார். அதைக் கண்ட கேப்டன் கோலி கடும் கோபம் கொண்டார். குல்தீப் யாதவ் அருகே சென்ற கோலி முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு அவரிடம் பேசினார்.

வாரி இறைத்த குல்தீப்

வாரி இறைத்த குல்தீப்

குல்தீப் யாதவ் அந்த ஓவரில் மட்டும் 16 ரன்கள் கொடுத்தார். குல்தீப் யாதவ் பந்துவீச்சில் மட்டுமே 5 சிக்ஸர்கள் அடித்தனர் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள். குல்தீப் 10 ஓவர்களில் 67 ரன்கள் கொடுத்து இருந்தார். ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 315 ரன்கள் குவித்தது. எனினும், இந்தியா இந்த இலக்கை வெற்றிகரமாக சேஸிங் செய்தது. ரோஹித் 63, ராகுல் 77, கோலி 85 ரன்கள் குவித்தனர். கடைசி வரை நின்ற ஜடேஜா அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

Story first published: Monday, December 23, 2019, 13:03 [IST]
Other articles published on Dec 23, 2019
English summary
IND vs WI : Kuldeep Yadav scolded by Virat Kohli after loose bowling.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X