கெட்ட வார்த்தையில் சத்தமாக திட்டிய ரோஹித்.. அதிர்ச்சி அடைந்த இளம் வீரர்!

India vs West Indies 2nd ODI | Rohit Sharma scolding Pant after run out miss

விசாகப்பட்டினம் : இரண்டாவது ஒருநாள் போட்டியில் இளம் வீரர் ரிஷப் பண்ட் செய்த தவறை அடுத்து, களத்திலேயே ரோஹித் சர்மா அவரை கடுமையாக திட்டினார். அதைக் கண்ட ரிஷப் பண்ட் அதிர்ச்சி அடைந்தார்.

ஒரு ரன் அவுட் வாய்ப்பு பறிபோனதை அடுத்து தான் இந்த சம்பவம் நடந்தது. ரிஷப் பண்ட் அவசரத்தில் பந்தை திசை மாற்றி எறிந்ததால், கோபம் அடைந்த ரோஹித் சர்மா அவரை கடுமையாக திட்டினார்.

வெ.இண்டீஸ் தோல்வி

வெ.இண்டீஸ் தோல்வி

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 387 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 280 ரன்கள் மட்டுமே எடுத்து 107 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ரோஹித் அபார ஆட்டம்

ரோஹித் அபார ஆட்டம்

இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா 159 ரன்கள் குவித்து இந்தியா இமாலய ரன்களை எட்ட முக்கிய காரணமாக இருந்தார். அவருடன் துவக்கம் அளித்த ராகுல் 102 ரன்கள் குவித்தார்.

பண்ட் அதிரடி

பண்ட் அதிரடி

கோலி டக் அவுட் ஆன நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டம் ஆடினர். பண்ட் 16 பந்தில் 39 ரன்கள் குவித்தார். அப்போது ரசிகர்கள் பண்ட்டின் அதிரடி ஆட்டத்தை பாராட்டி வந்தனர்.

வெ.இண்டீஸ் நிலை

வெ.இண்டீஸ் நிலை

அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி 388 ரன்கள் இலக்கை நோக்கி சேஸிங் செய்தது. 5 விக்கெட்கள் இழந்த நிலையில், துவக்க வீரர் ஷாய் ஹோப் தொடர்ந்து ஆடி வந்தார்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

33வது ஓவரில் ஜேசன் ஹோல்டர் பந்தை அருகிலேயே அடித்து விட்டு ஒரு ரன் ஓடினார். எதிர் முனையில் இருந்த ஹோப் வேகமாக ரன் ஓடி வந்தார். விக்கெட் கீப்பர் பண்ட் பந்தை எடுத்து பந்துவீச்சாளர் முனையில் வீசினார்.

ரோஹித் என்ன சொன்னார்?

ரோஹித் என்ன சொன்னார்?

ஆனால், விக்கெட் கீப்பர் முனையில் இருந்த ரோஹித் பந்தை தனக்கு வீசுமாறு கூறினார். எனினும், பதற்றத்தில் பந்தை எடுத்த பண்ட் பந்துவீச்சாளர் திசையில் வீசினார். ஹோல்டர் விரைவாக கிரீஸுக்குள் வந்து விட்டார்.

திட்டிய ரோஹித்

திட்டிய ரோஹித்

இரு பேட்ஸ்மேன்களும் ரன் அவுட் ஆகும் வாய்ப்பில் இருந்து தப்பினர். இதைக் கண்ட ரோஹித் சர்மா, ரன் அவுட் வாய்ப்பு பறிபோன கோபத்தில் ரிஷப் பண்ட்டை ஹிந்தியில் பயன்படுத்தப்படும் கெட்ட வார்த்தையில் சத்தமாக திட்டினார்.

கவாஸ்கர் ஆதரவு

கவாஸ்கர் ஆதரவு

அது மிகத் தெளிவாக ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி நேரலையில் ஒளிபரப்பானது. அப்போது வர்ணனையாளர் சுனில் கவாஸ்கர், ரிஷப் பண்ட் செய்தது தான் சரி என கூறினார்.

என்ன செய்தார் பண்ட்?

என்ன செய்தார் பண்ட்?

பண்ட் பந்துவீச்சாளர் திசையை நோக்கி ஓடி வந்து பந்தை எடுத்தார். அவர் பந்தை விக்கெட் கீப்பர் திசையில் வீச வேண்டும் என்றால் உடலை திருப்பி தான் வீச வேண்டும். அந்த பரபரப்பில் அது கடினம் என்பதால் தான், பந்தை விரைவாக பந்துவீச்சாளர் திசையில் வீசினார் பண்ட்.

ஹாட்ரிக் எடுத்த குல்தீப்

ஹாட்ரிக் எடுத்த குல்தீப்

எனினும், விக்கெட் வீழ்த்த வேண்டும் என்ற பரபரப்பில் இருந்த ரோஹித் அவரை திட்டினார். அதற்கு அடுத்த மூன்று பந்துகளில் தான் குல்தீப் யாதவ், வரிசையாக மூன்று விக்கெட்கள் வீழ்த்தி ஹாட்ரிக் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IND vs WI : Rohit Sharma uses cuss word on Rishabh Pant after missing a run out chance
Story first published: Thursday, December 19, 2019, 15:23 [IST]
Other articles published on Dec 19, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X