For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி வரை திக் திக்.. பனிக்கு நடுவே உயரத்திற்கு சென்ற பந்து.. ஷர்துல் பிடித்த கேட்ச்.. மிரண்ட எதிரணி

கொல்கத்தா: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் ஷர்துல் தாக்கூர் பிடித்த ஒரு ரிஸ்கான கேட்ச்-ஆல் சக வீரர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை எடுத்தது.

ஒன்றுக்கூடிய அதிரடி ஜோடி

ஒன்றுக்கூடிய அதிரடி ஜோடி

கடந்த 2வது டி20 போட்டியிலேயே இதே போன்ற இலக்கை நோக்கி அருகில் வந்து அச்சுறுத்தியது வெஸ்ட் இண்டீஸ் அணி. அதே போன்று இந்த போட்டியிலும் வாய்ப்பு உருவானது. கடந்த போட்டியை போன்றே கெயில் மேயர்ஸ் (6) சாய் ஹோப் (8) என சொற்ப ரன்களுக்கு வெளியேறினர். இதனால் மீண்டும் நிகோலஸ் பூரண், ரோவ்மேன் போவெல் ஜோடி சேர்ந்தனர்.

 திடீர் பதற்றம்

திடீர் பதற்றம்

2வது டி20 போட்டியில் இந்த ஜோடி தான் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை அச்சுறுத்தினர். இதே போன்று இன்றும் மலமலவென் ரன்களை குவித்தனர். இதனால் போட்டியில் பதற்றம் சூழ்ந்தது. இந்நிலையில் அதற்கெல்லாம் ரிஸ்க்கான முயற்சியை எடுத்து முடிவு கட்டினார் ஷர்துல் தாக்கூர்.

பந்து எங்கு போனது?

பந்து எங்கு போனது?

ஆட்டத்தின் 7வது ஓவரில் ஹர்ஷல் பட்டேல் வீசிய பந்தை ரோவ்மேன் போவெல் சிக்ஸர் அடிக்க முயன்று கிடாசினார். அவரின் முழு திறணையும் கொடுத்து அடித்ததால் பந்து பெரும் உயரத்திற்கு சென்றது. இதனை பிடிப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். பந்து விழும் திசையிலும் ஃபீல்டர்கள் இல்லை. ஆனால் அப்போது எண்ட்ரி கொடுத்தார் ஷர்துல் தாக்கூர்.

மிரண்டுப்போன பேட்ஸ்மேன்

மிரண்டுப்போன பேட்ஸ்மேன்

கடும் பனிப்பொழிவுக்கு இடையே பந்தை பார்த்துக்கொண்டே பின் திசையில் ஓடினார். எந்த திசையில் வருகிறது என்பதை பலராலும் கணிக்க முடியவில்லை. அப்படி இருக்கையில், சரியாக அந்த பந்தை கேட்ச் பிடித்து அசத்தினார். எவராலும் அதனை பிடிக்க முடியாது என நின்றுக்கொண்டிருந்த பேட்ஸ்மேன் போவெல்லே மிரண்டுபோய் பார்த்தார். இதனையடுத்து அவரின் ஆட்டம் 25 ரன்களுக்கு முடிவுற்றது. ரிஸ்கான கேட்சை பிடித்த ஷர்துலுக்கும் பாராட்டு குவிந்து வருகிறது.

Story first published: Sunday, February 20, 2022, 22:48 [IST]
Other articles published on Feb 20, 2022
English summary
Shardul thakur takes a breath taking catch of rovman powell in the 3rd t20 against west indies
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X