தொடரை வென்றது இந்தியா.. சூர்யகுமார், விராட் கோலி அதிரடி.. ஆஸ்திரேலயாவுக்கு பதிலடி தந்த ரோகித் படை

ஐதராபாத் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

Recommended Video

IND vs AUS 3rd T20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

இந்த வெற்றியின் மூலம் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து 9 முறை இருத்தரப்பு டி20 தொடரை வென்றது.

தொடரை தீர்மானிக்கும் முக்கிய ஆட்டத்தில் இந்திய அணியில் ரிஷப் பண்டும், ஆஸ்திரேலிய அணியில் சென் அப்பார்ட்டும் அதிரடியாக நீக்கப்பட்டனர்.

விராட் கோலியின் 2 இமாலய சிக்சர்.. ஆடி போன ஆடம் சாம்பா.. 3 ஆண்டுகளுக்கு முன் ஆடிய அதே ஆட்டம்விராட் கோலியின் 2 இமாலய சிக்சர்.. ஆடி போன ஆடம் சாம்பா.. 3 ஆண்டுகளுக்கு முன் ஆடிய அதே ஆட்டம்

186 ரன்கள்

186 ரன்கள்

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் 19 பந்துகளில் கேமிரான் கிரின் அரைசதம் விளாசினார். பெரிய ஸ்கோர் ஆஸ்திரேலிய அணி எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்சர் பட்டேல், சாஹல் ஆகியோர் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தனர். இறதியில் டிம் டேவிட் அரைசதம் விளாச, ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 186 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.

30 ரன்களுக்கு 2 விக்கெட்

30 ரன்களுக்கு 2 விக்கெட்

187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ராகுல் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் ரோகித் சர்மா 17 ரன்களில் வெளியேற, இந்திய அணி 30 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து சற்று தடுமாறியது. அப்போது களத்தில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்து அதிரடியை காட்டியது.

கோலி அதிரடி

கோலி அதிரடி

விராட் கோலி கவுண்டர் அட்டாக் ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக ஹேசல்வுட் வீசிய பந்தை சிக்சருக்கும், ஆடம் சாம்பா பந்தையும் சிக்சருக்கு கோலி விரட்டினார். மறுமுனையில் நின்று கொண்டு இருந்த சூர்யகுமார் யாதவ், ஆஸ்திரேலிய பந்துவீச்சை மைதானத்தின் நான்கு பக்கமும் சிதறடித்தார்.

தொடரை வென்றது இந்தியா

தொடரை வென்றது இந்தியா

இதனால் இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 36 பந்துகளை எதிர்கொண்ட சூர்யகுமார் 69 ரன்களை விளாசினார். இதில் 5 சிக்சர்களும், 5 பவுண்டரிகளும் அடங்கும். விராட் கோலி 38 பந்துகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது 8வது அரைசதத்தை அடித்தார். கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. விராட் கோலி முதல் பந்தில் சிக்சர் அடித்து மறு பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் ஒரு ரன்னும், 4வது பந்து டாட் பாலாக ஆனது. இதனால் கடைசி 2 பந்தில், 4 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட ஹர்திக் பவுண்டரி அடித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
India beat Australia and won the series 2-1 தொடரை வென்றது இந்தியா.. சூர்யகுமார், விராட் கோலி அதிரடி.. உலக சாம்பியனுக்கு பதிலடி தந்த ரோகித் படை
Story first published: Sunday, September 25, 2022, 22:59 [IST]
Other articles published on Sep 25, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X