For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இங்கிலாந்து போட்டியில் தோற்க கோலி தான் காரணம்.. ஆதாரத்துடன் இணையத்தில் சுற்றும் அந்த போட்டோ..!!

எட்ஜ்பாஸ்டன்: இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணியின் தோல்விக்கு விராட் கோலி பர்கர் சாப்பிட்டது தான் காரணம் என்று ரசிகர்கள் கிண்டலடித்துள்ளனர்.

எட்பாஸ்டனில் நடைபெற்ற உலக கோப்பை லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது.

ஆசை காட்டி ஏமாற்றியது போல... இந்திய வீரர்கள் கடைசி 7 ஓவரில் ஆட்டத்தின் முற்றிலும் மாற்றினர். குறிப்பாக தோனி, கேதர் ஜாதவின் ஆட்டம் பெரும் விமர்சனத்திற்கு ஆளானது.

மோசமான ஆட்டம்

மோசமான ஆட்டம்

அதேவேளையில், பாகிஸ்தான் அணியின் அரையிறுதி கனவை கலைக்கவே இந்தியா இந்த மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது என நெட்டிசன்கள் புகுந்து கமெண்டகளை அள்ளிதெளித்து விட்டனர்.

பர்கர் சமாச்சாரம்

இந்த போட்டியை இணையத்தில் உலா வரும் நெட்டிசன்கள் இப்போதைக்கு விட மாட்டார்கள் போல தெரிகிறது. எதில் எல்லாம் காரணம் கிடைக்கும்.. கழுவி ஊற்றி விடலாம் என்று தேடி பார்த்திருக்கின்றனர். அவர்களுக்கு கடைசியாக கிடைத்தது பர்கர் சமாச்சாரம்.

எக்கச்சக்க டென்ஷன்

அதாவது... இந்தியா வெற்றி கோட்டை எட்டுமா என்று அனைவருமே நகம் கடித்த படி டென்ஷனில் இருக்க... கேப்டன் கோலியோ கூலாக பர்கர் சாப்பிட்ட புகைப்படம் இணையத்தில் வெளியானது. அவ்வளவு தான்...மானாவாரியாக மானத்தை வாங்கிவிட்டனர். அவற்றில் சில சாம்பிள்ஸ் இதோ.

பர்கரால் தோல்வி

இங்கே நாங்கள் ஏகத்துக்கும் டென்ஷனாக இருக்கிறோம். அங்கே பர்கர் கடித்துக் கொண்டிருக்கிறார்... கோலி.. பாருங்கள் என்று ரசிகர் ஒருவர் பொருமி தள்ளி இருக்கிறார். மற்றொருவரோ... கோலி பர்கர் சாப்பிட்டார், அதான் இந்தியா தோற்றுவிட்டது என்றார்.

நபீல் என்ற ரசிகர் வெளியிட்டிருக்கும் டுவிட்டர் தான் ஏக மாஸ். ஏன் இந்தியா தோற்றுவிட்டது தெரியுமா? இங்கிலாந்து நன்றாக விளையாடவில்லை, இந்தியா போராட வில்லை...மாறாக கோலி பர்கர் தின்றது என்று விமர்சித்திருக்கிறார்.

ஆதரவும், எதிர்ப்பும்

ஆதரவும், எதிர்ப்பும்

இறுதிக்கட்ட ஓவர்களில் இந்தியா வெற்றிக்கு திணறி வந்த நிலையில், கேப்டன் கோலி பதற்றம் ஏதும் இன்றி பர்கர் சாப்பிட்டிருக்கிறார். இதை எப்படி ஏற்றுக் கொள்வது என்று ரசிகர்கள் ஒருபக்கம் கருத்துகள் கூறினாலும், இது மார்பிங் செய்யப்பட்ட போட்டோ என்றும் அதில் இருப்பது கோலி அல்ல என்றும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

உண்மையான போட்டோ

உண்மையான போட்டோ

ஆனால், அதற்கும் ஒரு பதில் வைத்திருக்கின்றனர் இணையவாசிகள். நேற்று ஆட்டம் முடிந்த போது, பேட்டியளிக்க வர்ணனையாளரிடம் வந்தார். அப்போது அவர் அரை டிராயர்(அதாவது பெர்முடாஸ்) அணிந்திருந்தது நன்றாக தெரிந்தது. ஆக அவர் பர்கர் சாப்பிடும் போது அதே பெர்முடாவுடன் தான் இருந்தார். எனவே அது கோலி தான் என்று அடித்துச் சொல்கின்றனர்.

Story first published: Monday, July 1, 2019, 18:10 [IST]
Other articles published on Jul 1, 2019
English summary
India defeated against england because kohli ate burger.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X