தெ.ஆப்பிரிக்காவில் ஆடிய பார்ம் இருந்தால், உலகக் கோப்பை நமக்கே: கம்பீர்

Posted By:
Gautam Gambhir
சென்னை: தென் ஆப்பிரிக்காவில் நடந்த தொடரின்போது இருந்த அதே ஊக்கம் இருந்தால் நிச்சயமாக இந்தியா அடுத்த மாதம் துவங்கும் உலகக் கோப்பையை கைப்பற்றும் என்று கௌதம் கம்பீர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது,

தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி பல இக்கட்டான சூழ்நிலைகளிலும் சிறப்பாக ஆடியது. இது வரை நாங்கள் தென் ஆப்பிரிக்காவில் சிறப்பாக விளையாடியதே இல்லை. இந்த தடவை தான் முதன்முறையாக அருமையாக விளையாடினோம்.

அது டெஸ்ட் மேட்ச் ஆகட்டும், ஒரு நாள் ஆட்டம் ஆகட்டும் இந்த முறை நாங்கள் நன்றாக விளையாடினோம். நாங்கள் ஒரு நாள் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடியதுடன், டெஸ்ட் தொடரை சமன் செய்தோம். மேலும், நடந்த ஒரே ஒரு டுவென்டி- டுவென்டி ஆட்டத்திலும் வெற்றி பெற்றோம்.

இதே போல உலகக் கோப்பைப் போட்டியிலும் ஆடினால் நிச்சயம் கோப்பை நமக்குக் கிடைக்கும் என்றார்.

Story first published: Friday, January 28, 2011, 13:52 [IST]
Other articles published on Jan 28, 2011

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற