என்ன சூனாபானா அவ்வளவுதான் உங்க கெத்தா.. சாஹல் சூழலில் சுருண்ட தென்னாப்பிரிக்கா.. இந்தியா வெற்றி

Posted By:
சூனா பானா தென்னாப்பிரிக்காவை புரட்டி எடுத்த இந்திய அணி- வீடியோ

செஞ்சுரியன்: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபாரமாக வென்றது. முதல் போட்டியில் இந்திய ஸ்பின் பவுலர்கள் மிகவும் சிறப்பாக பந்து வீசினார்கள்.

இதையடுத்து இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி ஸ்பின் பவுலர்களை நம்பி களம் இறங்கியது. ஆடுகளம் சூழலுக்கு சாதகம் இல்லை என்றாலும் இந்தியா சென்ற போட்டி போல தில்லாக இறங்கியது.

இந்த நிலையில் இந்த போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடி இருக்கிறது. முக்கியமாக சாஹல் ருத்ர தாண்டவம் ஆடி இருக்கிறார்.

டாஸ்

டாஸ்

சென்ற போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்றது. இந்த போட்டியில் இந்திய கேப்டன் கோஹ்லி டாஸ் வென்றார். டாஸ் வென்ற கோஹ்லி, தென்னாப்பிரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.

அதே டீம்

அதே டீம்

இந்திய அணி இந்த முறையும் அதே அணியுடன் களம் இறங்கியது. முக்கியமாக ஸ்பின் பவுலர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. தென்னாப்பிரிக்க அணியில் சென்ற முறை செஞ்சுரி அடித்த டியூ பிளசிஸ் காயம் காரணமாக அணியில் இருந்து விலகிவிட்டார்.

கலக்கல்

இந்திய பவுலிங் கலக்கல் கலாசலாவாக இருந்தது. முக்கியமாக சாஹல் முதல்முறையாக 22 ரன் கொடுத்து 5 விக்கெட் எடுத்தார். இதுதான் இவரது சிறந்த பவுலிங் ஆகும். அதேபோல் குல்தீப் யாதவ் 20 ரன் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். பும்ரா, புவனேஷ்வர்குமார் தலா ஒருவிக்கேட் எடுத்தனர்.

சுருண்டது

சுருண்டது

இந்த நிலையில் 2வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா 118 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 32.2 ஓவரில் தென்னாப்பிரிக்கா அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய அணிக்கு 119 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. யாருமே 25 ரன்களை தாண்டவில்லை.

பேட்டிங்

பேட்டிங்

இந்த நிலையில் இந்தியா பேட்டிங் இறங்கிய தொடக்கத்திலேயே அதிரடியாக ஆடியது. ரோஹித் சர்மா ஆரபத்திலேயே சிக்ஸர் அடித்தார். அதன்பின் இந்தியா அதிரடியாக ஆடியது. இதனால் 1 விக்கெட் இழப்பிற்கு 20.3 ஓவரில் எளிதாக 119 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மேலும் தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.

Story first published: Sunday, February 4, 2018, 16:33 [IST]
Other articles published on Feb 4, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற