3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: தென்னாப்பிரிக்காவுக்கு 304 ரன்கள் இலக்கு.. கோஹ்லி அபாரம்

Posted By:
மூன்றாவது ஒருநாள் போட்டி தென் ஆப்ரிக்கா பந்து வீச்சு- வீடியோ

கேப்டவுன்: இந்தியா- தென்னாபிரிக்காவுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 303 ரன்களை எடுத்தது. கேப்டன் விராத் கோஹ்லி அபாரமாக ஆடி ஒரு சதமும், அரை சதமும் பெற்றார்.

2-1 என டெஸ்ட் தொடரை இந்தியா இழந்தது. ஆனால் ஒருநாள் தொடரில் இந்தியா சிறப்பாக விளையாடி வருகிறது.

தற்போது தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி கேப்டவுனில் நடக்கிறது. இதில் இந்தியா பேட்டிங் களம் இறங்கியது.

இரண்டு வெற்றி

இரண்டு வெற்றி

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபாரமாக வென்றது. அதேபோல் இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடி வென்றது. இதனால் ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.

ஸ்பின் பவுலர்கள்

ஸ்பின் பவுலர்கள்

இந்திய அணி இந்த முறையும் அதே அணியுடன் களம் இறங்கி உள்ளது. முக்கியமாக ஸ்பின் பவுலர்களை நம்பி களம் இறங்கி உள்ளது. புதிதாக அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

விலகல்

விலகல்

தென்னாப்பிரிக்கா அணி ஒருநாள் தொடரில் மண்ணை கவ்விக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் வரிசையாக முக்கியமான வீரர்கள் அணியில் இருந்து விலகி உள்ளனர். டி வில்லியர்ஸ், டி யூ பிளசிஸ், குயின்டன் டி காக் ஆகியோர் விலகி இருக்கிறார்கள்.

பேட்டிங்

பேட்டிங்

கேப்டவுனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில்தான் இந்தியா தோற்றது. தற்போது 3வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று உள்ளது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்து வீச முடிவு செய்தது. இந்தியா பேட்டிங் களம் இறங்கியது.

இந்தியா அதிரடி

இந்தியா அதிரடி

இந்தியா தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடியது. ரோஹித் டக் அவுட்டில் வெளியேறினாலும் தவான் அதிரடியாக ஆடினார். 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 6 விக்கெட்டுக்கு 303 ரன்களை குவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு 304 ரன்களை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விராத் கோஹ்லி 159 பந்துகளில் 160 ரன்களை குவித்தார்.

Story first published: Wednesday, February 7, 2018, 17:17 [IST]
Other articles published on Feb 7, 2018
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற