டெல்லியில் முதல் வெற்றி, ராஜ்கோட்டில் தொடர் வெற்றி – கோஹ்லி அன்ட் கோ தயார்

Posted By: Staff

ராஜ்கோட்: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டி-20 போட்டி நடக்கும் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தை, ரூ.5 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் செய்துள்ளனர். அதேபோல் நியூசிக்கு எதிரான தொடரை வெல்வதை கோஹ்லி அண்ட் கோ என்ஷூர் செய்ய உள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 ஒருதினப் போட்டிகள், 3 டி-20 போட்டித் தொடர்களில் விளையாட வந்துள்ளது. முதலில் நடந்த ஒருதினப் போட்டித் தொடரை 2-1 என்று இந்தியா வென்றது. அடுத்ததாக துவங்கிய டி-20 போட்டித் தொடரில், டெல்லியில் நடந்த ஆட்டத்தில் வென்று 1-0 என இந்தியா முன்னிலையில் உள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய 5 டி-20 போட்டிகள் அனைத்திலும் நியூசிலாந்து அணியே வென்று அசைக்க முடியாத அணியாக இருந்தது. டெல்லி போட்டியில் வென்று, அந்த மோசமான சாதனையை இந்தியா முறியடித்தது.

ராஜ்கோட்டில் நியூசியுடன் மோதல்

ராஜ்கோட்டில் நியூசியுடன் மோதல்

இந்த நிலையில் ராஜ்கோட்டில் நாளை இரண்டாவது டி-20 போட்டி நடக்க உள்ளது. முதல் போட்டியில் வென்ற தெம்புடன் இந்திய அணி களமிறங்க உள்ளது. ராஜ்கோட்டில் நடக்கும் இரண்டாவது டி-20 போட்டி இதுவாகும். இதற்கு முன், 2013ல் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியை, 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

கலக்கத் தயாராக உள்ள வீரர்கள்

கலக்கத் தயாராக உள்ள வீரர்கள்

பேட்டிங்கில் ரோஹித் சர்மா, ஷிகார் தவான், கோஹ்லி, டோணி, பாண்டியா என்று வரிசைக் கட்டி அடிக்கத் தயாராக உள்ள நிலையில், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரீத் பூம்ரா, சாஹல் போன்றோர் பவுலிங்கில் கலக்குகின்றனர்.

திருவனந்தபுரத்தில் அடுத்த போட்டி

திருவனந்தபுரத்தில் அடுத்த போட்டி

ஒட்டுமொத்தமாக இந்திய அணி வெற்றிக் கூட்டணியாக அமைந்துள்ளது. மூன்றாவது டி-20 போட்டி 7ம் தேதி திருவனந்தபுரத்தில் நடக்க உள்ளது. அதற்கு முன்பாகவே நாளையப் போட்டியில் வென்று, இந்தியா தொடரையும் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நியூசிக்கு எதிராக முதல் தொடர் வெற்றி

நியூசிக்கு எதிராக முதல் தொடர் வெற்றி

இந்தாண்டில், டி-20 போட்டிகளில் இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு எதிரான தொடர்களை இந்தியா வென்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் 1-1 என்ற சமநிலையில் முடிந்தது. இந்த நிலையில், நியூசிலாந்து எதிராக முதல் முறையாக டி-20 தொடரை வெல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

Story first published: Friday, November 3, 2017, 18:48 [IST]
Other articles published on Nov 3, 2017
Please Wait while comments are loading...