இந்தியா- ஆஸ்திரேலியா நாளை மோதல்.. சேப்பாக்கத்தில் கிரிக்கெட் திருவிழா

Posted By:

சென்னை: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது.

ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 ஆட்டத்தில் விளையாடுதவற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை நடக்கிறது.

ஆஸ்திரேலிய அணி மிகவும் பலம் பொருந்தியவை என்பதால் இந்திய வீரர்கள் மிகவும் கடுமையாக போராட வேண்டும். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் இரு அணிகளும் உள்ளதால் ரசிகர்களுக்கு விருந்து காத்துள்ளது.

தொடக்க வீரர் யார்

தொடக்க வீரர் யார்

தவான் விளையாட வில்லை என்பதால் அவருக்கு பதிலாக ரோகித்சர்மாவுடன் ரஹானே அல்லது ராகுல் தொடக்க வீரராக ஆடுவார்கள் என தெரிகிறது. அஸ்வின், ஜடேஜா இல்லாமல் இந்திய அணி புதுமுக சுழற்பந்து வீரர்களுடன் ஆடுகிறது. அக்‌ஷர் பட்டேல், யசுவேந்திர சஹால், குல்தீப் யாதவ் இலங்கை தொடரில் நேர்த்தியாக பந்துவீசினார். இதில் இருவர் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறுவர்.

பும்ராவுக்கு வாய்ப்பு

பும்ராவுக்கு வாய்ப்பு

வேகப்பந்து வீரர்களான உமேஷ்யாதவ், முகமது ‌ஷமி ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர். ஏற்கனவே பும்ராவும், புவனேஸ்வர்குமாரும் நல்ல நிலையில் உள்ளனர். இலங்கை தொடரில் பும்ரா 15 விக்கெட் வீழ்த்தினார். இதனால் அவருடன் மூவரில் ஒருவராக இணைந்து இடம் பெறுவர்.

ஆஸி. அணியில் பிஞ்ச் அவுட்

ஆஸி. அணியில் பிஞ்ச் அவுட்

ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஸ்மித், வார்னர், மேக்ஸ்வெல் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும் கும்மின்ஸ், நாதன் கோல்டர், பலக்னெர் போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர். காயத்தால் தொடக்க வீரர் ஆரோன்பிஞ்ச் ஆடவில்லை என்பது அந்த அணிக்கு பாதகம். அவருக்கு பதிலாக வார்னருடன் தொடக்க வீரராக டிரெவிஸ்ஹெட் அல்லது ஹேன்ட்ஸ் ஹோம் இடம் பெறலாம்.

பகல்-இரவு ஆட்டம்

பகல்-இரவு ஆட்டம்

நாளைய ஆட்டம் பகல்-இரவில் நடக்கிறது. பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷன், தூர்தர்‌ஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Story first published: Saturday, September 16, 2017, 18:26 [IST]
Other articles published on Sep 16, 2017

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற