இந்தியா-ஆஸி. கிரிக்கெட் போட்டி.. ரசிகர்களுக்காக சென்னையில் நாளை கூடுதல் ரயில்கள் இயக்கம்

Posted By:

சென்னை: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது.

ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 ஆட்டத்தில் விளையாடுதவற்காக இந்தியா வந்துள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை நடக்கிறது.

 India vs Australia : Aaron Finch to miss first ODI

நாளைய ஆட்டம் பகல்-இரவில் நடக்கிறது. பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதையடுத்து ரசிகர்கள் வசதிக்காக, கூடுதல் பறக்கு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பு: நாளை பிற்பகல் 12.30 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து திருமயிலைக்கும், மறுமார்க்கத்தில் திருமயிலையில் இருந்து சென்னை கடற்கரைக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், போட்டி முடிந்து ரசிகர்கள் வீடு திரும்பும்போதும் வேளச்சேரி மற்றும் சென்னை கடற்கரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

2 வருடங்களாக சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெறவில்லை. அரிதாகத்தான் சர்வதேச போட்டியும் நடக்கிறது. எனவே ரசிகர்கள் கூட்டம் ஸ்டேடியத்தில் அலைமோதும் என எதிர்பார்க்கலாம்.

Story first published: Saturday, September 16, 2017, 18:37 [IST]
Other articles published on Sep 16, 2017

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற