For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸி. தொடர் வெற்றி பற்றி கன்னா பின்னா என உளறிய ரவி சாஸ்திரி.. ரசிகர்கள் கடும் கோபம்

Recommended Video

உளறிய ரவி சாஸ்திரியால் கடுப்பான இந்திய ரசிகர்கள்- வீடியோ

சிட்னி : இந்தியா, ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளது.

இந்த நேரத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரவி சாஸ்திரி வெற்றி குறித்து "ரொம்ப ஓவராக" பேசி ரசிகர்களை எரிச்சலடைய வைத்துள்ளார். அப்படி என்ன பேசினார்?

பெரிய வெற்றி பெற்ற இந்தியா

பெரிய வெற்றி பெற்ற இந்தியா

இந்தியா 2-1 என நான்கு போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. இதற்கு முன் எந்த ஆசிய அணியும் செய்யாத இந்த சாதனையை இந்தியா செய்துள்ளது. இது நிச்சயம் பெரிய வெற்றி தான். அதில் சந்தேகமில்லை. ஆனால், இதை 1983 உலகக்கோப்பை வெற்றியை விட பெரிது என கூறினால் நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா?

1983 உலகக்கோப்பையை விட பெரிது

1983 உலகக்கோப்பையை விட பெரிது

அதை தான் செய்துள்ளார் ரவி சாஸ்திரி. அவர் கூறுகையில், "இந்த வெற்றி 1983 உலகக்கோப்பை, 1985 உலக சாம்பியன்ஷிப் வெற்றி அது போல அல்லது அதற்கும் மேல் இது பெரிய வெற்றி. காரணம், இது கிரிக்கெட்டின் உண்மையான வடிவம் (டெஸ்ட் போட்டி). இது டெஸ்ட் கிரிக்கெட். மிக கடினமானது" என கூறினார்.

வலுவான வெஸ்ட் இண்டீஸ் அணி

வலுவான வெஸ்ட் இண்டீஸ் அணி

ரவி சாஸ்திரி சொன்னதை ஒருவர் கூட ஒப்புக் கொள்ள தயாராக இல்லை. 1983 உலகக்கோப்பையில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி (அந்த அணியில் ரவி சாஸ்திரியும் இருந்தார்), அன்றைக்கு மிக வலுவான அணியாக அறியப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணியை இறுதியில் வீழ்த்தியது. அது எத்தகைய வெற்றி என்றால், 100 கோடி மக்கள் கொண்ட ஒரு நாட்டை கிரிக்கெட் போட்டிகளை பின்பற்ற வைத்த வெற்றி.

ஜாம்பவான் அணியை எதிர்த்து வெற்றி

ஜாம்பவான் அணியை எதிர்த்து வெற்றி

முன்னணி வீரர்கள் இல்லாமல், வெற்றிக்கான உத்வேகம் இல்லாமல், பந்து சேத விவகாரத்தில் சிக்கி மனதளவில் சோர்ந்து போன ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றியை, 1983இல் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் ஜாம்பவான்களை கொண்டிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணியோடு ஒப்பிட்டு இருப்பது பல ரசிகர்களை கடுப்படைய வைத்துள்ளது.

ரவி சாஸ்திரி மோசமான பேச்சு

ரவி சாஸ்திரி மோசமான பேச்சு

ஏற்கனவே, இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது கடந்த 15-20 ஆண்டுகளில் இது தான் சிறந்த அணி என படு தோல்வி அடைந்த இந்திய அணியை காட்டினார். அதற்கும் கடும் விமர்சனத்தை சந்தித்தார் ரவி சாஸ்திரி. தற்போது மீண்டும் அது போன்ற ஒரு மோசமான கூற்றை கூறியுள்ளார். ரசிகர்கள் தங்கள் கோபத்தை ட்விட்டரில் கொட்டியுள்ளனர். அவற்றில் சில -

தள்ளி வைங்க

"இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். ஆனால் ஒரு வேண்டுகோள், ரவி சாஸ்திரியை அடுத்த சில நாட்களுக்கு செய்தியாளர்களிடம் இருந்து தள்ளி வைக்கவும்"

அரசியல்வாதி போல பதில்

"ஒரு சாதாரண கேள்விக்கு அரசியல்வாதி போல பதில் கூறியுள்ளார் ரவி சாஸ்திரி"

அது போல வருமா?

"எந்த நிகழ்வும் 1983 உலகக்கோப்பை வெற்றியை வீழ்த்த முடியாது. வலுவான வெஸ்ட் இண்டீஸ் அணியை உலகக்கோப்பை இறுதியில் வீழ்த்தியது ஒப்பிட முடியாதது. ரவி சாஸ்திரி, விளையாட்டை நிறுத்துங்க"

அதிகப்படியான பேச்சு

"ரவி சாஸ்திரியின் முட்டாள்தனமாக, அதிகப்படியாக பேசிய பத்திரிகையாளர் சந்திப்பை பார்த்தேன். அவருக்கு நான் ஒன்றே ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். ஆஸ்திரேலியா தனது அகங்காரத்தால் தான் இப்போது இருப்பது போல சுருங்கிப் போய் உள்ளது. இந்த அணிக்கும் அதே விதி ஏற்பட நாங்கள் விரும்பவில்லை"

கிரேக் சாப்பலே பரவாயில்லை

"கிரேக் சாப்பல் ரவி சாஸ்திரியை விட எவ்வளவோ மேல்"

Story first published: Monday, January 7, 2019, 15:51 [IST]
Other articles published on Jan 7, 2019
English summary
India vs Australia : Ravi Shastri says Australia test series victory is bigger than 1983 World cup
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X