For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தீராத 4 முக்கிய குழப்பங்கள்.. நாளை இந்தியா vs ஆஸ்திரேலியா முதல் டி20 போட்டி..விழிப்பிதுங்கும் ரோகித்

மும்பை: ஆஸ்திரேலிய அணியுடனான டி20 தொடருக்காக இறுதிகட்ட ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

Recommended Video

IND vs AUS 1st T20: Predicted Playing 11 என்ன? | Aanee's Appeal

டி20 உலகக்கோப்பை தொடர் வரும் நவம்பரில் வரவுள்ள சூழலில் இந்திய அணிக்கு அடுத்த 2 மாதங்கள் ஒரு ஓட்டப்பந்தயம் போல் உள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் மோதவுள்ளது.

இந்திய அணிக்கு திரும்பிய உமேஷ் யாதவ்.. 3 காரணங்களை பரிசீலித்த பிசிசிஐ.. திட்டம் பலன் அளிக்குமா?இந்திய அணிக்கு திரும்பிய உமேஷ் யாதவ்.. 3 காரணங்களை பரிசீலித்த பிசிசிஐ.. திட்டம் பலன் அளிக்குமா?

முதல் டி20

முதல் டி20

இதில் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் மோதும் முதல் டி20 போட்டி நாளை நடைபெறவிருக்கிறது. இந்த போட்டி பஞ்சாப் கிரிக்கெட் வாரிய மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முழு பலமும் நாளை களமிறங்குவதால், ப்ளேயிங் 11 எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ப்ளேயிங் 11 என்ன

ப்ளேயிங் 11 என்ன

இந்நிலையில் ப்ளேயிங் 11ல் இன்னும் 4 குழப்பங்களுக்கு ரோகித் தீர்வு காணாமலேயே உள்ளார். இதில் முதல் பிரச்சினை அக்‌ஷர் பட்டேல் - தீபக் ஹூடா தான். ஜடேஜாவுக்கு மாற்றாக இடதுகை வீரராக வந்துள்ள அக்‌ஷர் பட்டேலுக்கு ஆசிய கோப்பையில் பெரிய வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் டி20 உலகக்கோப்பையில் இவருக்கு பெரும் பொறுப்பு இருப்பதால், நிச்சயம் இவருக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது.

பண்ட் இருப்பாரா?

பண்ட் இருப்பாரா?

அடுத்ததாக ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் பிரச்சினைக்கு இன்னும் முடிவு எட்டப்படவில்லை. டாப் ஆர்டரில் இடதுகை பேட்ஸ்மேன் தேவை என்பதற்காக பண்ட்-ஐ வைத்துள்ளனர். ஆனால் அவர் சிறப்பாக சோபிக்கவில்லை. அக்‌ஷர் பட்டேல் ஒருவேளை என்ட்ரி கொடுத்தால், பண்ட் நீக்கப்பட்டு விடலாம் எனத் தெரிகிறது.

பவுலிங் யூனிட்

பவுலிங் யூனிட்

இந்திய அணியின் பவுலிங்கில் ஹர்ஷல் பட்டேல் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளதால் அடுத்து வரும் 6 போட்டிகளும் அவர்களுக்கு முக்கியம். எனவே அவர்கள் இடம்பெறலாம். 3வது வேகப்பந்துவீச்சாளராக ஹர்திக் இருப்பார். இந்திய களத்தில் 3 வேகப்பந்துவீச்சாளர்கள் போதுமென்றாலும், ஆஸ்திரேலியாவில் தேவை. எனவே அதற்கு சோதனை செய்யலாம்.

அஸ்வினின் நிலைமை

அஸ்வினின் நிலைமை

அந்த வகையில் பார்த்தால், புவனேஷ்வர் குமார் இருக்கிறார். ஆனால் அவர் தொடர்ச்சியாக விளையாடி வருவதால், ஓய்வு கொடுத்துவிட்டு, தீபக் சஹார் களமிறங்கலாம். ஒருவேளை 3வது முழுநேர வேகப்பந்துவீச்சாளர் தேவையில்லை என்றால் ரவிச்சந்திரன் அஸ்வின் அந்த இடத்தை நிரப்புவார் எனத் தெரிகிறது.

Story first published: Monday, September 19, 2022, 18:16 [IST]
Other articles published on Sep 19, 2022
English summary
Rohit sharma still have a 4 confusions in Team india playing 11 ahead of India vs Australia t20 series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X