புருஷன்னா இப்படி இருக்கணும்.. கூடவே இருந்து.. தட்டிக் கொடுத்து.. அசத்தல் பரிசளித்த அலிஸா!

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணியின் இன்றைய வெற்றிக்கு முக்கிய காரணமே அலிஸா ஹீலி மற்றும் பெத் மூனியின் அபாரமான பேட்டிங்தான். அதிலும் அலிஸா ஆடிய விதம்.. ஆஹா.. என்று சபாஷ் போட வைத்து விட்டது.

IND Vs AUS Women T20 World Cup Final - Australia Won India by 85 runs - Aus Lifts The Cup

ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் ஸ்டார்க்கின் மனைவிதான் அலிஸா. ஆனால் ஸ்டார்க்கின் மனைவியாக இன்று யாருமே அவரை பார்க்கவில்லை. மாறாக தனது அபாரமான பேட்டிங் திறனால் அனைவரையுமே அதிர வைத்து விட்டார் அலிஸா.

அலிஸாவுக்கு இன்று செம பூஸ்ட்தான். காரணம் அவரது கணவரான ஸ்டார்க் தனது அணிக்கு ஆடுவதை விட்டு விட்டு மனைவியை ஊக்கப்படுத்துவதற்காக மெல்போர்ன் வந்திருந்தார். கூடவே இருந்து தட்டிக் கொடுத்து ஊக்கமளித்ததால் சூப்பரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் அலிஸா.

ஆசியா ஓசியானியா குத்துச் சண்டை குவாலிபயர்.. நச்சுன்னு நாலு குத்து.. பூஜா ராணி வெற்றி!

 ஆட்டம் அட்டகாசம்

ஆட்டம் அட்டகாசம்

அலிஸாவின் ஆட்டம் இன்று படு அட்டகாசமாக இரு்நதது. அதிரடியாக ஆடிய அவர் 75 ரன்களைக் குவித்தார். 39 பந்துகளைச் சந்தித்த அவர் 75 ரன்களைக் குவித்தார். இதில் 7 பவுண்டரிகளும், 5 அட்டகாசமான சிக்ஸர்களும் அடக்கம். ஆடவர் ஆஸ்திரேலிய அணிக்கு சற்றும் சளைக்காத வீரத்துடன் மகளிர் அணியினர் இன்று நொறுக்கி எடுத்தனர்.

 அபார பேட்டிங்

அபார பேட்டிங்

அலிஸாவின் அருமையான பேட்டிங் அந்த அணிக்கு சிறப்பான ஊக்கமாக அமைந்தது. அலிஸா மட்டுமில்லீங்க. இன்று பெத் மூனியும் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 54 பந்துகளைச் சந்தித்த பெத் மூனி 78 ரன்களை விளாசினார். 10 பவுண்டரிகளை பெத் மூனி விளாசித் தள்ளி விட்டார். சிக்ஸர் விளாசத் தவறிய பெத் மூனி, அதை பவுண்டரிகள் மூலம் சரிக் கட்டினார்.

 வெற்றிக்குக் காரணம்

வெற்றிக்குக் காரணம்

இந்த இருவரும்தான் இன்று ஆஸ்திரேலியா வெல்ல மிக முக்கியக் காரணமாக அமைந்தனர். டாஸ் வென்று பேட்டிங்கைத் தொடங்கியது முதலே அனல் பறக்க ஆடியது ஆஸ்திரேலியா. சொந்த ஊரில் விளையாடியதும் ஆஸ்திரேலியாவுக்கு மிகப் பெரிய ஊக்கமாக அமைந்தது. கூட்டம் ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலியாகவுக்கு ஆதரவாக இருந்ததும் இன்னொரு பிளஸ்.

 கேத்தி பெர்ரி வருகை

கேத்தி பெர்ரி வருகை

இன்றைய போட்டியில் சில விஐபிகளையும் காண முடிந்தது. பாப் சூப்பர் ஸ்டார் கேதி பெர்ரியும் வந்திருந்து ஆஸ்திரேலிய அணிக்கு ஆதரவாக குரல் எழுப்பியபடி காணப்பட்டார். தொடக்க ஓவரிலேயே அலிஸா அபாரமான 3 பவுண்டரிகளை விளாசினார். கிளாசிக்கான அந்த பவுண்டரிகளிலேயே இந்தியாவின் மனசு நிலை குலைந்து போய் விட்டது என்று கூறலாம். தொடக்க ஓவரை வீசிய தீப்தி சர்மாவே இதை எதிர்பார்க்கவில்லை.

 இந்திய பீல்டிங் மோசம்

இந்திய பீல்டிங் மோசம்

இன்று இந்தியாவின் பீல்டிங் ரொம்ப மோசமாக இருந்தது. அதைச் சொல்லியே ஆக வேண்டும். சரியாக பீல்ட் செய்யவில்லை. அலிஸா 9 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட் ஆக வேண்டியது. ஆனால் மோசமான பீல்டிங்கால் அதை இந்திய வீராங்கனைகள் நழுவ விட்டு விட்டனர். ஆஸ்திரேலியாவின் வெற்றிக்குத் தேவையான ரன்களை தொடக்க நிலை வீராங்கனைகளே திரட்டிக் கொடுத்ததுதான் இன்றைய ஹைலைட்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Mitchell Starc Encourages His Wife Alyssa Healy
Story first published: Sunday, March 8, 2020, 17:37 [IST]
Other articles published on Mar 8, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X