For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இன்று முதல் டி20.. மிரட்டப் போவது யார்.. இந்திய சுழலை சமாளிக்குமா இங்கிலாந்து?

Recommended Video

இன்று தொடங்குகிறது முதல் டி20...வெல்லும் முனைப்பில் இந்தியா!- வீடியோ

மான்செஸ்டர்: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி, இந்திய நேரப்படி இன்று இரவு 10 மணிக்கு மான்செஸ்டரில் துவங்க உள்ளது.

இதுவே தொடரின் முதல் போட்டி என்பதால் இரு அணிகளும் வெற்றியுடன் தொடரை தொடங்குவதில் முனைப்பாக இருக்கின்றன. இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் இதுவரை 11 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் இங்கிலாந்து அணி 6 போட்டிகளில் வென்று முன்னிலை வகிக்கிறது.

இங்கிலாந்து அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா அணியை 6-0 என்ற கணக்கில் தோல்வியடைய செய்தது. மேலும் சொந்த மண்ணில் விளையாடுவது இங்கிலாந்துக்கு மேலும் பலமாகும்.

வலுவான இங்கிலாந்து பேட்டிங்

வலுவான இங்கிலாந்து பேட்டிங்

அந்த அணியின் பேட்டிங் வரிசை சிறப்பாக உள்ளது. பேட்டிங்கில் ராய், ஹேல்ஸ், பட்லர், மோர்கன், ரூட் ஆகியோரும் பந்துவீச்சில் மொயின் அலி, அதில் ரஷீத், டேவிட் வில்லி, கிறிஸ் ஜோர்டான் மற்றும் பிளங்கெட் அணிக்கு பலம் சேர்க்கின்றனர். ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அணியில் இடம் பெறாதது அவர்களுக்கு பின்னடைவேயாகும்.

இந்தியாவின் ஸ்பின் சூப்பர்

இந்தியாவின் ஸ்பின் சூப்பர்

ஆனால் இந்திய அணியின் சுழல் பந்துவீச்சை எவ்வாறு இங்கிலாந்து எதிர்கொள்ளப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் மிகச்சிறந்த சுழல் பந்துவீச்சாளர்கள் ஆவர். மேலும் அவர்கள் இங்கிலாந்து அணிக்கு கடுமையான சவால் அளிப்பார்கள்.

 சரியான போட்டி காத்திருக்கு

சரியான போட்டி காத்திருக்கு

இந்திய அணியை பொறுத்தவரை இங்கிலாந்து அணிக்கு சரி சமமான பலம் கொண்ட அணியாக விளங்குகிறது. திறமையும், அனுபவமும் ஒருங்கே கொண்ட இந்திய அணி சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இங்கிலாந்து அணியை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் இந்திய அணியில் பும்ரா இடம்பெறாதது நமது வேகப்பந்துவீச்சை சற்றே பாதித்துள்ளது என்றுதான் கூறவேண்டும். இதனால் உமேஷ் யாதவ் , புவனேஸ்வர் குமார், சித்தார்த் கவுல் ஆகியோர் சிறப்பாக பந்துவீச வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். சுழல் பந்து இரட்டையர்கள் சாஹல் - குலதீப் கூட்டணி சிறப்பாக பந்து வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடும் 11 பேர் யார்

ஆடும் 11 பேர் யார்

ஆனால் அணியில் ஆடும் 11 பேர் கொண்ட அணியை தேர்வு செய்வது விராட் கோஹ்லிக்கு அவ்வளவு சுலபமாக இருக்காது.ராகுல், ரெய்னா, மனிஷ் பாண்டே மற்றும் தினேஷ் கார்த்திக் இவர்களில் யாரை தேர்வு செய்வார் என்பது நாளை போட்டிக்கு முன்னரே தெரியும். போட்டி நடக்கும் ஆடுகளமானது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியில் சுழல் பந்துவீச்சுக்கு சாதமாக ஆடுகளம் ஒத்துழைத்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி 2 சுழல் மற்றும் 2 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் என தெரிகிறது.

இரு அணிகளில் யார் யார்?

இரு அணிகளில் யார் யார்?

உத்தேச அணி விவரம் :

இங்கிலாந்து: ஜேசன் ராய் , பட்லர் , மோர்கன் ,ஹேல்ஸ் , பைர்ஸ்டோவ் , ரூட் , மெயின் அலி , ரஷீத் ,பிளாங்கெட் , வில்லி மற்றும் ஜோர்டான்

இந்தியா : தவான் , ரோஹித் சர்மா , விராட் கோஹ்லி,டோனி ,ராகுல் , ரெய்னா / பாண்டே /கார்த்திக் ,ஹர்டிக் பாண்டியா ,சாஹல் , குலதீப் , புவனேஸ்வர் குமார் மற்றும் உமேஷ் யாதவ்

காத்திருக்கும் சாதனைகள் :

காத்திருக்கும் சாதனைகள் :

இந்திய வீரர்கள் விராட் கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா முறையே 8 மற்றும் 51 ரன்களை எடுக்கும் பட்சத்தில் டி20 போட்டிகளில் 2000 ரன்களை கடந்த வீரர்கள் என்ற பெருமையை பெறுவார்கள்.




Story first published: Tuesday, July 3, 2018, 18:27 [IST]
Other articles published on Jul 3, 2018
English summary
India are all set to face England in their first T20 encounter in Manchester.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X