For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா? 5வது டெஸ்ட் போட்டி - ஒரு அலசல்

லண்டன் : இந்திய இங்கிலாந்து அணிகளிக்கிடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க இருக்கிறது. தொடரை 3-1 என்ற நிலையில் இங்கிலாந்து கைப்பற்றிய நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டி ,இங்கிலாந்து தொடக்க வீரர் குக்கின் கடைசி போட்டி என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த போட்டி குறித்த ஒரு அலசல் இதோ..

India vs england last test preview ,will india get second victory


ஓவல் மைதான நிலவரம் :

100 ஆண்டுகளுக்கும் மேலாக போட்டிகள் நடைபெற்று வரும் லண்டன் கியா ஓவல் மைதானத்தில் புற்கள் காணப்படுவதால் கடைசி இரண்டு நாட்களுக்கு ஆடுகளம் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமையலாம். இந்திய அணி இங்கு கடைசியாக கடந்த 2014ஆம் ஆண்டு இந்த மைதானத்தில் விளையாடிய போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 266 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இங்கிலாந்து அணி :

இங்கிலாந்து அணி கடந்த போட்டியில் அறிவித்த அணியையே இந்த போட்டிக்கும் அறிவித்துள்ளது. பேர்ஸ்டாவ் மீண்டும் விக்கெட் கீப்பராக அறிவிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியை பொறுத்தவரை அந்த அணி வலிமையாகவே உள்ளது. சாம் கர்ரன்,பட்லர் மற்றும் மொயீன் அலி ஆகியோர் பார்மில் இருப்பது அவர்களின் பலம்.

இந்த போட்டி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் குக்கின் கடைசி போட்டி என்பதால் அவரை வெற்றியுடன் வழியனுப்ப இங்கிலாந்து அணி கடுமையாக போராடி வெற்றி பெற முயற்சி செய்யும். ரூட் மீண்டும் நான்காம் நிலையில் களமிறங்குவது அவரது தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. இங்கிலாந்து 4-1 என்ற நிலையில் தொடரை வெல்ல விரும்புவதாக ரூட் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி :

இந்திய அணியின் பெரும் பலவீனம்,நமது தொடக்க வீரர்கள். ஒரு இன்னிங்சில் கூட தொடக்க வீரர்கள் அரைசதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் ராகுல் அல்லது தவானுக்கு பதிலாக அறிமுக வீரர் ப்ரித்வி ஷா களமிறக்கப்படலாம் என்று தெரிகிறது.

கடந்த போட்டியில் பெரிதும் சோபிக்காத ஹார்டிக் பாண்டியாவுக்கு பதிலாக ஹனுமா விஹாரி அணியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோஹ்லி,ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் பேட்டிங்கில் வலு சேர்க்கிறார்கள். காயம் காரணமாக அவதிப்படும் அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜா களம் காண்பார் எனவும் தெரிகிறது. பந்துவீச்சை பொறுத்தவரையில் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு சற்றும் குறைவில்லாத வகையில் உள்ளது.

இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இந்திய அணி இந்த தொடரில் இரண்டாவது டெஸ்ட் வெற்றியை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்..!




Story first published: Friday, September 7, 2018, 10:14 [IST]
Other articles published on Sep 7, 2018
English summary
India vs england last test preview ,will india get second victory
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X