எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. முன்கூட்டியே நடத்தப்படும் பயிற்சி போட்டி.. அதுவும் முழுவதுமாக நடைபெறாதா??

லெய்செஸ்டர்சையர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரசிகர்கள் எதிர்பாராத ட்விஸ்டை பிசிசிஐ கொடுத்துள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இதில் முதல் டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1ம் தேதி பிர்மிங்கம் நகரில் நடைபெறவுள்ளது.

தொடக்கமே இப்படி ஒரு பின்னடைவு.. இங்கிலாந்து டெஸ்டை வெல்வது கடினம் தான்.. இந்திய அணிக்கு உருவான சவால் தொடக்கமே இப்படி ஒரு பின்னடைவு.. இங்கிலாந்து டெஸ்டை வெல்வது கடினம் தான்.. இந்திய அணிக்கு உருவான சவால்

பயிற்சி ஆட்டம்

பயிற்சி ஆட்டம்

இங்கிலாந்து களத்தில் சுமார் ஓராண்டுக்கு பின்னர் இந்திய அணி விளையாடுகிறது. இதே போல கடந்த 3 மாதங்களாக இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டே விளையாடவில்லை. எனவே இதனை மனதில் வைத்து பயிற்சி போட்டிக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்திருந்தது. ஜூன் 24ம் தேதி கவுண்டி அணிக்கும் இந்திய அணிக்கும் 4 நாட்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

திடீர் ட்விஸ்ட்

திடீர் ட்விஸ்ட்

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான பயிற்சி போட்டி திடீரென ஒருநாளுக்கு முன்னதாக இன்று ( ஜூன் 23 ) தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் அனைவரும் குழப்பமடைந்துள்ளனர். இதற்கு மழைப்பொழிவு தான் காரணம் எனக் கூறப்படுகிறது.

என்ன காரணம்

என்ன காரணம்

போட்டி நடைபெறும் லெய்செஸ்டர்சையர் நகரத்தில் நாளை முதல் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. குறிப்பாக கடைசி நாளான 28ம் தேதி அதிக வாய்ப்புள்ளதாம். எனவே போட்டியை முழுவதுமாக நடத்துவதற்காக தான் போட்டி இன்று தொடங்கப்பட்டுள்ளது.

எப்படி பார்க்கலாம்

எப்படி பார்க்கலாம்

இரு அணிகளும் மோதும் பயிற்சி ஆட்டம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படாது. ஃபாக்ஸ் தொலைக்காட்சியின் யூடியூப் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இதில் ரோகித் சர்மாவின் தலைமை முழு படையும் களமிறங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
India vs England Warm up match ( இந்தியா vs இங்கிலாந்து பயிற்சி போட்டி ) இங்கிலாந்து அணியை எதிர்பதற்கான இந்திய அணியின் பயிற்சி போட்டியில் திடீரென ட்விஸ்ட் கொடுத்துள்ளனர்.
Story first published: Thursday, June 23, 2022, 10:22 [IST]
Other articles published on Jun 23, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X