For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோகித் பேச்சை மீறிய கே.எல்.ராகுல்.. நெதர்லாந்து போட்டியில் மோசமான அவுட்.. ரசிகர்கள் அதிருப்தி!l

இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் ஏமாற்றப்பட்டு விக்கெட்டானது ரசிகர்களிடையே சோகத்தை கொடுத்துள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

 இந்திய அணி பேட்டிங்.. டாஸில் தனி ரூட் போட்ட ரோகித் சர்மா.. வெற்றியை தாண்டி இப்படி ஒரு காரணமா?? இந்திய அணி பேட்டிங்.. டாஸில் தனி ரூட் போட்ட ரோகித் சர்மா.. வெற்றியை தாண்டி இப்படி ஒரு காரணமா??

முதல் இன்னிங்ஸ்

முதல் இன்னிங்ஸ்

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் போட்டி நடைபெறும் சிட்னி களம் பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமான ஒன்று என்பதால் அசால்டாக சிக்ஸர்களை விளாசலாம். ஆனால் ஏமாற்றமாக ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் நிதான தொடக்கத்தை கொடுத்தனர்.

மோசமான அவுட்

மோசமான அவுட்

எப்படியும் கியரை மாற்றுவார்கள் என்று எண்ணிய நேரத்தில் தான் கே.எல்.ராகுலுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. 3வது ஓவரில் வான் மீகேரென் வீசிய ஃபுல் டெலிவெரி பந்தை ராகுல் ஃப்ளிக் ஷாட் ஆட முயன்று எல்.பி.டபள்யூ ஆனார். அம்பயர் அவுட் கொடுத்துவிட்ட போதும், கே.எல்.ராகுலால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ரோகித்தின் அட்வைஸ்

ரோகித்தின் அட்வைஸ்

நேரடியாக ரோகித்திடம் சென்ற கே.எல்.ராகுல், பந்து ஸ்டம்பிற்கு வெளியே சென்றதா என கேட்டார். அதற்கு ரோகித் சர்மாவும் துணிச்சலுடன் டி.ஆர்.எஸ் எடுத்துப்பார் எனக் கூறினார். எனினும் தொடர்ந்து சந்தேகத்துடனே இருந்த கே.எல்.ராகுல் கடைசி வரை 3வது நடுவருக்கு பரிந்துரைக்கவில்லை. இதனால் கே.எல்.ராகுல் 12 பந்துகளில் வெறும் 9 ரன்களை மட்டுமே அடித்து வெளியேறினார்.

ஏமாந்த ராகுல்

ஏமாந்த ராகுல்

ஆனால் உண்மையில் கே.எல்.ராகுலின் முடிவு தவறான ஒன்று. அந்த பந்து லெக் ஸ்டம்ப்பை விட்டு வெளியே சென்றது தெரியவந்துள்ளது. அதை மட்டும் டி.ஆர்.எஸ் எடுத்திருந்தால் கே.எல்.ராகுலின் அதிரடியால் இந்தியாவின் ஸ்கோர் 200 ரன்களை தொட்டிருக்கலாம். அந்த ஒரு தவறால் பவர் ப்ளேவில் ரன்கள் குறைவாகவே வந்தது. இதுமட்டுமல்லாமல் கே.எல்.ராகுல் தொடர்ச்சியாக 2 போட்டிகளில் சொற்ப ரன்களுக்கு வெளியேறியுள்ளார்.

Story first published: Thursday, October 27, 2022, 15:20 [IST]
Other articles published on Oct 27, 2022
English summary
KL Rahul got dissappointment after he didn't take DRS in India vs netherland of T20 world cup 2022
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X