For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா Vs நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டி -பிளேயிங் லெவன் என்ன? வானிலை நிலவரம், பிட்ச் ரிப்போர்ட்

ஆக்லாந்து : இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு நடைபெறுகிறது.

டி20 தொடரை இந்தியா வென்ற நிலையில், ஒருநாள் தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றினால் தரவரிசையில் முதல் இடத்திற்கு செல்லும்.

இந்த நிலையில், இந்திய அணியின் தற்காலிக கேப்டனாக ஷிகர் தவான் களமிறங்குகிறார். ரோகித், கோலி, ராகுல் ஆகிய சீனியர் வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

டாஸ் போடும் நேரத்தில் இப்படியா?.. இந்தியா - நியூசிலாந்து முதல் டி20 நடப்பதில் சிக்கல்.. காரணம் என்ன?டாஸ் போடும் நேரத்தில் இப்படியா?.. இந்தியா - நியூசிலாந்து முதல் டி20 நடப்பதில் சிக்கல்.. காரணம் என்ன?

பேட்டிங் வரிசை

பேட்டிங் வரிசை

டி20 போட்டியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட சுப்மான் கில், ஒருநாள் தொடரில் ஷிகர் தவானுக்கு ஜோடியாக தொடக்கத்தில் களமிறங்க உள்ளார். இதே போன்று விராட் கோலி இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு தான் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடுவரிசையில், சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிஷப் பண்ட் களமிறங்க உள்ளனர்.

யாருக்கு வாய்ப்பு

யாருக்கு வாய்ப்பு

6வது இடத்திற்கு சஞ்சு சாம்சனும், 7வது இடத்திற்கு வாசிங்டன் சுந்தர் அல்லது தீபக் ஹூடாவுக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம். வேகப்பந்துவீச்சு தரப்பில் தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், உம்ரான் மாலிக் மற்றும் ஆர்ஸ்தீப் சிங் என 4 வீரர்களில் 3 பேருக்கு வாய்ப்பு தரலாம். சுழற்பந்துவீச்சில் சாஹலுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதில் இந்திய அணியின் பந்துவீச்சு பலத்தை அதிகரிக்க, சஞ்சு சாம்சனை நீக்கிவிட்டு, வாசிங்டன், தீபக் ஹூடா என இருவரையும் கூட இந்திய அணி பயன்படுத்தலாம்.

ஆடுகளம், வானிலை

ஆடுகளம், வானிலை

ஆடுகளத்தை பொறுத்தவரை ரக்பி மைதானம் என்பதால் பவுண்டரி லைன்கள் மிகவும் சிறியதாக இருக்கும். இதனால் ரன் குவிப்புக்கு சாதகாக இருக்கும். ஆக்லாந்து ஆடுகளத்தில் சுழற்பந்துவீச்சாளர்கள் ஒரு ஓவருக்கு 4.79 ரன்களும், வேகப்பந்துவீச்சாளர்கள் 5.3 ரன்கள் கொடுத்துள்ளனர். இந்த புள்ளி விவரம் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

வில்லியம்சனுக்கு நெருக்கடி

வில்லியம்சனுக்கு நெருக்கடி

நியூசிலாந்து அணியை பொறுத்தவரை கேன் வில்லியம்சன் ஒருநாள் தொடரில் கேப்டனாக திரும்பியுள்ளார்.2019 உலககோப்பை தொடருக்கு பிறகு வில்லியம்சன் வெறும் 6 ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடி இருக்கிறார். இதில் அவர் ஸ்ட்ரைக் ரேட் வெறும் 56.16 என்ற அளவிலேயே உள்ளது. நியூசிலாந்து அணியில் டாம் லாத்தம் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் மாட் ஹென்றி அணிக்கு திரும்பியுள்ளனர். அடுத்த 50 ஓவர் உலககோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்தியா தனது பயணத்தை இந்தப் போட்டியின் மூலம் தொடங்குகிறது.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

இந்திய அணி 1, ஷிகர் தவான், 2, சுப்மான் கில், 3, ஸ்ரேயாஸ் ஐயர், 4,சூர்யகுமார் யாதவ், 5, ரிஷப் பண்ட் , 6, தீபக் ஹூடா, 7 சஞ்சு சாம்சன் / வாசிங்டன் சுந்தர், 8,தீபக் சாஹர், 9, ஷர்துல் தாக்கூர், 10, ஆர்ஸ்தீப் சிங், 11, சாஹல் / குல்தீப்

நியூசிலாந்து அணி 1, ஃபின் ஆலன், 2, டிவோன் கான்வே, 3,கேன் வில்லியம்சன், 4, டாம் லாத்தம், 5, டேரல் மிட்செல், 6, கிளன் பிலீப்ஸ், 7, ஜேம்ஸ் நீஷம், 8, மிட்செல் சாண்டனர், 9, டிம் சௌதி, 10, மாட் ஹென்றி, 11,லோக்கி ஃபெகுர்சன்

Story first published: Thursday, November 24, 2022, 15:59 [IST]
Other articles published on Nov 24, 2022
English summary
India vs New Zealand playing xi – preview and weather forecast
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X