For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது அவுட்டே இல்லை! அம்பயரிடம் முறையிட்ட நியூசி. கேப்டன்.. குறுக்கிட்ட தோனி.. 2வது டி20யில் சர்ச்சை!

ஆக்லாந்து : இந்தியா - நியூசிலாந்து இடையே நடைபெற்று வரும் இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து வீரர் மிட்செல்-க்கு வழங்கப்பட்ட எல்பி.டபுள்யூ முடிவு சர்ச்சையில் முடிந்துள்ளது.

இரண்டாவது டி20 போட்டியில் க்ருனால் பண்டியா வீசிய பந்தில் எல்பி.டபுள்யூ முறையில் ஆட்டமிழந்தார் மிட்செல். இவருக்கு வழங்கப்பட்ட அவுட் முடிவு சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியா அசத்தல்

இந்தியா அசத்தல்

முதல் டி20யில் படுதோல்வி அடைந்த இந்தியா இரண்டாவது டி20 போட்டியில் அணியில் எந்த மாற்றமும் செய்யாமல் களம் இறங்கியது. டாஸ் வென்று நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. முதல் போட்டி போல அல்லாமல், இந்த முறை இந்தியா துவக்கம் முதலே விக்கெட்களை அள்ளியது.

க்ருனால் 2 விக்கெட்கள்

க்ருனால் 2 விக்கெட்கள்

6வது ஓவரை வீசிய க்ருனால் பண்டியா இரண்டு விக்கெட்களை எடுத்து அசத்தினார். அவரின் இரண்டாவது விக்கெட் தான் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. க்ருனால் வீசிய அந்த ஓவரின் கடைசி பந்தை மிட்செல் சந்தித்தார்.

அம்பயர் அவுட் கொடுத்தார்

அம்பயர் அவுட் கொடுத்தார்

பந்து காலில் பட்டது போல தெரியவே, இந்திய வீரர்கள் எல்.பி.டபுள்யூ கேட்டனர். கள அம்பயர் அவுட் கொடுத்தார். இதையடுத்து மிட்செல், எதிரில் நின்று கொண்டிருந்த கேப்டன் கேன் வில்லியம்சனிடம் கேட்டு விட்டு ரிவ்யூவுக்கு சென்றார்.

இது சரியா?

இது சரியா?

மூன்றாவது அம்பயர் செய்த ரிவ்யூ தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதில் ஹாட்ஸ்பாட் தொழில்நுட்பத்தில் பந்து, பேட்டில் படுவது தெரிந்தது. எனினும், பந்து ஸ்டம்ப்பில் படுகிறது என்பதை மட்டும் உறுதி செய்த மூன்றாவது அம்பயர், அவுட் கொடுத்து விட்டார்.

முறையிட்ட கேப்டன்

முறையிட்ட கேப்டன்

மிட்செல் அவுட் தான் என நடையை கட்ட ஆரம்பித்தார். இதை கண்ட கேப்டன் கேன் வில்லியம்சன் அம்பயரிடம் இது அவுட் இல்லை, பந்து பேட்டில் பட்டது என முறையிட்டார். மிட்செல் களத்தை விட்டு வெளியேறாமல் நின்றார்.

தோனி பேசினார்

தோனி பேசினார்

இந்த சம்பவங்களால், களத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின் தோனி, வில்லியம்சனிடமும், அம்பயரிடமும் சென்று பேசவே, இது விக்கெட் தான் என முடிவு செய்யப்பட்டு மிட்செல் வெளியேறினார். எனினும், இந்த விக்கெட் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.

ஹாட்ஸ்பாட் சர்ச்சை

ஹாட்ஸ்பாட் சர்ச்சை

சிலர் ஹாட்ஸ்பாட் முறை நம்பகத்தன்மை வாய்ந்தது அல்ல என கூறி வருகின்றனர். ஒரு சிலர் பந்து, பேட்டில் பட்டது என அனைவருக்கும் தெரிந்தும் கள அம்பயர் அவுட் கொடுத்துவிட்டால் வெளியேற வேண்டும் என கூறுவது சரியில்லை.

Story first published: Friday, February 8, 2019, 13:12 [IST]
Other articles published on Feb 8, 2019
English summary
India vs Newzealand 2nd ODI : A big drama over Mitchell LBW decision, which is controversial, as the hotspot shows ball hit the bat.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X