ஸ்ரேயாஸின் ஒரே ஒரு அரைசதம்.. ஆபத்தில் சீனியர்களின் டெஸ்ட் கரியர்.. டிராவிட்டின் ப்ளான் சக்ஸஸ்!

கான்பூர்: இளம் வீரரின் அசத்தல் ஆட்டத்தால் இந்திய அணியின் சீனியர் வீரர்களின் டெஸ்ட் கரியர் முடிவுக்கு வருவதாக முன்னாள் வீரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று கான்பூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

3 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு உண்மையான “பிகில்” அணிக்கு அங்கீகாரம்..!!3 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு உண்மையான “பிகில்” அணிக்கு அங்கீகாரம்..!!

இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் நாளின் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்துள்ளது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இப்போட்டியின் முதல் செஷனில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 82 ரன்களை எடுத்து வலுவாக இருந்தது. அதன்பின்னர் 2வது செஷன் தொடங்கிய போது ஓப்பனிங் வீரர் சுப்மன் கில் 52 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். இதனால் அணியை மீட்க வேண்டிய பொறுப்பு சீனியர் வீரர்களான சட்டீஸ்வர் புஜாரா மற்றும் ரகானே ஆகியோரிடம் வந்தது. கடந்த சில போட்டிகளில் இவர்களின் ஃபார்ம் மோசமாக உள்ளதால், இன்று தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

மீண்டும் ஏமாற்றிய சீனியர்கள்

மீண்டும் ஏமாற்றிய சீனியர்கள்

ஆனால் அது நடக்கவில்லை. முதல் விக்கெட்டிற்கு களமிறங்கி மிகவும் நிதானமாக விளையாடி வந்த சட்டீஸ்வர் புஜாரா 61 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து நடையை கட்டினார். இதனால் அனைவரின் பார்வையும் ரகானேவிடம் திரும்பியது. ஏனென்றால் இந்த டெஸ்ட் போட்டியில் ரகானே தேவையா என்ற கேள்வியே பலரிடமும் இருந்தது. 2021ம் ஆண்டு அவருக்கு சிறப்பானதாக அமையவில்லை. கடைசி 20 இன்னிங்சில் அவர் வெறும் 407 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதில் வெறும் 2 அரைசதங்களே அடங்கும். எனினும் இந்த போட்டியிலும் சொதப்பலாகவே இருந்தது. 63 பந்துகளை சந்தித்த அவர், 35 ரன்களை எடுத்து வெளியேறினார்.

ஸ்ரேயாஸின் கிளாசிக்

ஸ்ரேயாஸின் கிளாசிக்

மீண்டும் ஒருமுறை இந்த 2 சீனியர் வீரர்களும் ஏமாற்றியதால் இவர்களின் இடத்திற்கு அடுத்த வீரரை தேர்ந்தெடுத்து விட வேண்டியது தான் என்பது போல பிசிசிஐ சிந்தித்து வரும். அதனை சுலபமாக்கும் விதத்தில் ரன்களை குவித்து அசத்தினார். ஸ்ரேயாஸ் ஐயர். 5 வீரராக களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், ஜடேஜாவுடன் சேர்ந்து சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தினார். 136 பந்துகளை சந்தித்த அவர் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 75 ரன்களை குவித்துள்ளார்.

Suryakumar or Shreyas? Rahane Picks for 1st Test against NZ | OneIndia Tamil
பிசிசிஐ ப்ளான்

பிசிசிஐ ப்ளான்

கே.எல்.ராகுல் காயம் காரணமாக முதல் டெஸ்டில் இருந்து வெளியேறியதால், மாற்று வீரராக ஸ்ரேயாஸ் வாய்ப்பு பெற்றார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்று அவர் அசத்தலாக ஆடியிருப்பதால் புஜாரா அல்லது ரகானேவுக்கு மாற்றாக நிச்சயம் பரிந்துரைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே இடத்திற்கு தான் சூர்யகுமார் யாதவும் போட்டிப்போட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Shreyas Iyer sends warning message to Pujara & Rahane with half-century in 1st test against newzealand
Story first published: Thursday, November 25, 2021, 17:11 [IST]
Other articles published on Nov 25, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X