தவான் சதம்.. கோஹ்லி, டோணி அதிரடி.. தெ. ஆப்பிரிக்காவுக்கு 290 ரன் வெற்றி இலக்கு

Posted By:

ஜோஹன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவுடனான 4வது ஒரு நாள் போட்டியில் இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 289 ரன்களை இந்தியா எடுத்தது.

முன்னதாக இந்தியா 200 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின்னர் தொடர்ந்தது. ஆட்ட நேர முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 289 ரன்களை எடுத்தது. ஷிகர் தவான் அதிரடியாக ஆடி 109 ரன்களைக் குவித்தார்.

India Vs South Africa, 4th ODI: Kohli opts to bat first, Shreyas replaces injured Kedar; ABD plays

கேப்டன் விராத் கோஹ்லி அதிரடியாக ஆடி 75 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பரான முன்னாள் கேப்டன் டோணி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 43 பந்துகளில் 42 ரன்களை எடுத்தார்.

தென் ஆப்பிரிக்கத் தரப்பில் காகிசோ ரபதா, லுங்கி அங்கிடி தலா 2 விக்கெட்களையும், மார்னி மார்க்கல், கிறிஸ் மோரிஸ் தலா ஒரு விக்கெட்டையும் சாய்த்தனர்.

இந்திய அணியில் கேதார் ஜாதவ் காயம் காரணமாக இடம் பெறவில்லை. அவருக்குப் பதில் ஷிரேயாஸ் அய்யர் இடம் பிடித்துள்ளார்.

India Vs South Africa, 4th ODI: Kohli opts to bat first, Shreyas replaces injured Kedar; ABD plays

தென் ஆப்பிரிக்க அணியில் அதிரடி வீரர் ஏபி டிவில்லியர்ஸ் இடம் பெற்றுள்ளளார். முதல் 3 போட்டிகளிலும் இந்தியா வென்று விட்ட நிலையில் இந்தப் போட்டி யார் வசமாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவுக்குத்தான் பெரும் நெருக்கடி.

இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் இளஞ்சிவப்பு நிற சீருடையில் ஆடுகின்றனர் என்பது விசேஷமானது.

தென் ஆப்பிரிக்க அணியில் காயா ஜோன்டாவுக்குப் பதில் டிவில்லியர்ஸ் களம் இறங்கியுள்ளார். சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிருக்குப் பதில் மார்னி மார்க்கல் இணைந்துள்ளார். வேகப் பந்து வீச்சாளர்களை நம்பி களம் இறங்கியுள்ளது தென் ஆப்பிரிக்கா. மறுபக்கம் பார்ட் டைம் ஸ்பின்னராக ஜேபி டுமினி இருக்கிறார்.

தென் ஆப்பிரிக்காவுடனான தொடரை வெல்ல இந்தியாவுக்கு ஒரே ஒரு வெற்றி போதும். அந்த வெற்றியை இப்போட்டியில் பெற்று தென் ஆப்பிரிக்காவை அதிர வைக்கும் இந்தியா என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர். தொடரை வென்றால், தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்தியா வெல்லும் முதல் ஒரு நாள் தொடராக இது அமையும்.

அணிகள் விவரம்:

தென் ஆப்பிரிக்கா: ஹசிம் ஆம்லா, அய்டன் மார்க்ரம், ஜேபி டுமினி, ஏபி டிவில்லியர்ஸ், ஹெய்ன்ரிச் கிளாசன், டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், ஆண்டைல் பெலுக்வ்யோ, காகிசோ ரபதா, லுங்கி அங்கிடி, மார்னி மார்க்கல்.

இந்தியா: ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராத் கோஹ்லி, அஜிங்கியா ரஹானே, டோணி, ஷிரேயாஸ் அய்யர், ஹர்டிக் பாண்ட்யா, புவனேஷ் குமார், குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரரா, யுஸ்வேந்திர சஹல்.

Story first published: Saturday, February 10, 2018, 16:43 [IST]
Other articles published on Feb 10, 2018
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற