For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்ன பரமா இதெல்லாம்..?? கே.எல்.ராகுலின் உடற்தகுதி.. சந்தேகத்தை கிளப்பும் மருத்துவ ரிப்போர்ட்!!

டெல்லி: காயம் காரணமாக தென்னாப்பிரிக்க தொடரில் இருந்து வெளியேறிய கே.எல்.ராகுலின் மருத்துவ ரிப்போர்ட் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு கே.எல்.ராகுல் தான் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.

6 பேருக்கு காயம்..நட்சத்திர வீரர்களும் இன்றி தவிக்கும் இந்திய அணி..தென்னாப்பிரிக்க தொடரில் பின்னடைவு6 பேருக்கு காயம்..நட்சத்திர வீரர்களும் இன்றி தவிக்கும் இந்திய அணி..தென்னாப்பிரிக்க தொடரில் பின்னடைவு

கடைசி நேரத்தில் அவருக்கு காயம் எனக்கூறி தொடரில் இருந்தே வெளியேறியதாக அறிவிப்பு வெளியானது.

கே.எல். ராகுலின் காயம்

கே.எல். ராகுலின் காயம்

பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு நேரடியாக அழைத்துச்செல்லப்பட்ட அவருக்கு, அங்கு பிசியோதெரபிஸ்ட்கள் உடற்தகுதியை மேம்படுத்தி வருகின்றனர். தொடரில் இருந்தே வெளியேறும் அளவிற்கான காயம் என ரசிகர்கள் பதற்றத்தில் இருந்த நிலையில் உடற்தகுதி குறித்து புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.

 உடல்நிலை அறிக்கை

உடல்நிலை அறிக்கை

அதாவது, கே.எல்.ராகுலுக்கு பெரிய காயமெல்லாம் ஒன்று ஏற்படவில்லை. ஓரிரண்டு தினங்களில் குணமடையும் அளவிற்கான காயம் தான் அது. எனவே அவர் வரும் ஜூன் 16ம் தேதி இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் ரோகித், விராட் கோலி உள்ளிட்ட மற்ற வீரர்களுடன் அவர் செல்லவிருக்கிறார்.

Recommended Video

IPL 2022: Sanga's Cricket Wrap | Rahul Dravid About Umran Malik | IND vs SA *CricketWrap
கிளம்பிய சர்ச்சை

கிளம்பிய சர்ச்சை

இந்நிலையில் இதுதான் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. கே.எல்.ராகுலின் காயம் சிறியது என்றால், அணியில் உள்ள பிசியோக்களுக்கு தெரிந்திருக்காதா??.. ஒரு சிறிய காயத்தை கூறி தொடரில் இருந்தே வெளியேறியது ஏன்?.. அவருக்கு ஓய்வு தந்து, எந்தவித காயமும் இன்றி இங்கிலாந்துக்கு அனுப்புவதற்காக தான் மாற்றி கூறப்பட்டதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அலட்சியமான செயல்

அலட்சியமான செயல்

தென்னாப்பிரிக்க தொடரில் இந்திய அணி சொதப்பி வருகிறது. 13 போட்டிகளில் தொடர் வெற்றி என்ற உலக சாதனை கை நழுவிச் சென்றுள்ளது. ஏற்கனவே சீனியர் வீரர்கள் அனைவருக்கும் ஒட்டுமொத்தமாக ஓய்வு தரப்பட்டதற்கு கண்டனங்கள் குவிந்த சூழலில், நம்பிக்கையாக இருந்த கே.எல்.ராகுலும் சென்றிருப்பது சிக்கலை உண்டாக்கியுள்ளது.

Story first published: Friday, June 10, 2022, 15:50 [IST]
Other articles published on Jun 10, 2022
English summary
KL Rahul Injury update ( கே.எல்.ராகுலின் உடற்தகுதி அப்டேட் ) காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த கே.எல்.ராகுல் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு செல்வதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X