For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

”அட புஜாராவுக்கான சாவி இதுதானா” என்ன நடந்தால் சிறப்பாக ஆடுவார்.. முன்னாள் வீரரின் சூப்பர் கணிப்பு!

ஜோகன்ஸ்பெர்க்: என்ன செய்தால் சட்டீஸ்வர் புஜாரா சிறப்பாக விளையாடுவார் என்பது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் டிப்ஸ் கூறியுள்ளார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பு கட்டத்தை எட்டியுள்ளது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை விட தென்னாப்பிரிக்கா 27 ரன்கள் தான் முன்னிலை பெற்ற நிலையில் 2வது இன்னிங்ஸில் கடின இலக்கை நிர்ணயிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

“வங்கதேச அணியா இது?”.. நியூசி, மண்ணில் படைத்த வரலாற்று வெற்றி.. இந்தியா, பாகிஸ்தானால் கூட முடியல! “வங்கதேச அணியா இது?”.. நியூசி, மண்ணில் படைத்த வரலாற்று வெற்றி.. இந்தியா, பாகிஸ்தானால் கூட முடியல!

2வது டெஸ்ட் போட்டி

2வது டெஸ்ட் போட்டி

ஆனால் அதற்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் தொடக்கத்திலேயே ஓப்பனிங் வீரர்கள் இருவரின் விக்கெட்டுகளும் சரிந்தன. மயங்க் அகர்வால், 23 ரன்களுக்கும், கேப்டன் கே.எல்.ராகுல் 8 ரன்களுக்கும் நடையை கட்டினர். இந்த இக்கட்டான சூழலில் களமிறங்கிய புஜாரா யாரும் எதிர்பார்த்திராத ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

புஜாராவின் இன்னிங்ஸ்

புஜாராவின் இன்னிங்ஸ்

மட்டைப்போட்டு பந்தை வீணாக்குவார் என கூறப்படும் புஜாரா நேற்று வெறும் 45 பந்துகளில் 36 ரன்களை விளாசினார். சமீப காலமாக விமர்சனங்களை சந்தித்து வரும் புஜாராவுக்கு இந்த 2வது இன்னிங்ஸ் தான் வாழ்வா? சாவா? கட்டமாக உள்ளது. இதில் சிறப்பாக செயல்பட்டால் தான் இனி இந்திய அணியில் இடம் கிடைக்கும். எனவே தனது கியரை மாற்றி சிறப்பாக விளையாடி வருகிறார்.

கடும் அழுத்தம்

கடும் அழுத்தம்

இந்நிலையில் புஜாராவின் மாற்றம் குறித்து பேசிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட், புஜாரா எப்போதெல்லாம் கடும் பிரஷரான சூழலில் இருக்கிறாரோ, அப்போதெல்லாம் மிகவும் நம்பிக்கையுடன் விளையாடுகிறார். ப்ளேயிங் 11 ல் இருந்து ஒதுக்கப்படுவோம் என்ற அச்சம் வந்தவுடனேயே சுந்ததிரமாக விளையாடி ரன்களை குவிக்க தொடங்குகிறார். இதனை நான் பல முறை பார்த்துள்ளேன்.

இங்கி, டெஸ்ட்

இங்கி, டெஸ்ட்

இதற்கு முன்னர் 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இங்கிலாந்து டெஸ்டிலும் இதே போன்ற சூழலில் தான் புஜாரா 91 ரன்கள் விளாசி அசத்தினார். இன்று தென்னாப்பிரிக்காவுடன் 35 ரன்கள் எடுத்து பாசிட்டிவாக ஆடி வருகிறார். ஆனால் இப்படிபட்ட ஆட்டத்தில் இருந்து ஏன் அவர் மீண்டும் சொதப்பல் நிலைக்கு செல்கிறார் என்று தான் புரியவில்லை.

Recommended Video

India set 240 Runs Target for win! Can Proteas defy history in Wanderers? | OneIndia Tamil
 சல்மான் பட் நம்பிக்கை

சல்மான் பட் நம்பிக்கை

ஒருமுறை பெரிய ஸ்கோரை அடித்துவிட்டால், அந்த நம்பிக்கையை மேலும் அதிகரித்து ரன்களை குவிக்க வேண்டும். ஆனால் அதனை புஜாராவால் செய்ய முடியவில்லை. ஒருநாள் அதனை நிச்சயம் அவர் புரிந்துக்கொண்டு சிறப்பாக விளையாடுவார் என நம்புகிறேன். தற்போது கூட சிறப்பான ஃபார்மில் இருக்கிறார் என்று தான் நான் கூறுவேன் என சல்மான் பட் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, January 5, 2022, 16:48 [IST]
Other articles published on Jan 5, 2022
English summary
Ex-Pak player salman butt notices gear shift in Pujara's approach 'whenever he is under pressure'
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X