For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரொம்ப கடுப்பா இருக்கு! மழையால் ஆட்டம் நிறுத்துவதை தடுக்க சுப்மான் கில் தந்த ஐடியா!யோசிக்குமா பிசிசிஐ

ஹாமில்டன் : அதிகப்படியான கிரிக்கெட் போட்டிகள் மழையால் ரத்து செய்யப்படுவதை காணும் போது வெறுப்பாக இருப்பதாக இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மான் கில் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியும், சரி நியூசிலாந்தில் நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியும் சரி, பெரும்பாலான ஆட்டங்களில் மழை தான் விளையாடுகிறது.

இதனால் ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்து வருகின்றனர். இன்று ஞாயிற்றுகிழமை கூட நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மழையால் கைவிடப்பட்டது.

சச்சின், சேவாக், ரோகித் சாதனையை உடைத்த சுப்மான் கில்.. தொடக்க வீரராக புதிய வரலாறு.. முழு விவரம் சச்சின், சேவாக், ரோகித் சாதனையை உடைத்த சுப்மான் கில்.. தொடக்க வீரராக புதிய வரலாறு.. முழு விவரம்

கடுப்பாக இருக்கிறது

கடுப்பாக இருக்கிறது

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சுப்மான் கில் ,மழையால் போட்டி ரத்து ஆவதை பார்க்கும் போது மிகவும் கடுப்பாக இருக்கிறது. மூன்றாவது ஒருநாள் போட்டி கிறிஸ்ட்சர்சில் நடைபெறுகிறது. அங்கேயாவது மழை பெய்யாமல் இருக்க வேண்டும். இன்றைய ஆட்டத்தில் கூட மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்டது. அப்போது மைதானத்திற்கும் ட்ரெஸ்ஸிங் ரூம்க்கும் சென்று சென்று திரும்பியது மிகவும் வெறுப்பாக இருந்தது.

மிகவும் சிரமம்

மிகவும் சிரமம்

மழை காரணமாக எத்தனை ஓவர் நாங்கள் எதிர்கொள்ளப் போகிறோம் என்று எங்களுக்கு தெரியவில்லை. இதனால் யுக்திகளை அமைத்து விளையாடுவதில் மிகவும் கடினமாக இருந்தது. இனி இது போன்று நடை பெறாமல் இருப்பது குறித்து கிரிக்கெட் வாரியங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்.ஒரு கிரிக்கெட் வீரராகவும் ரசிகனாகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகள் மழையால் தடைப்பட்டால் அது நிச்சயம் பார்ப்பதற்கு கடுப்பாக இருக்கும்.

சுப்மான் கில் ஐடியா

சுப்மான் கில் ஐடியா

எனவே கிரிக்கெட் போட்டிகளை உள் அரங்கில் நடத்த முடிவெடுக்க வேண்டும். இல்லையெனில் மேற் கூரைகள் அமைக்கப்பட்டு மழையின் போது மூடும் வகையில் மைதானங்கள் அமைக்கப்பட வேண்டும். இதன் மூலம் மழையால் கிரிக்கெட் போட்டி தடையாவதை தடுக்கலாம். தற்போது என்னை பொறுத்தவரை 2023 உலகக்கோப்பை போட்டியில் இடம்பெற வேண்டும் என்பதை குறித்து எல்லாம் நான் நினைக்கவில்லை. எனக்கு கிடைக்கும் வாய்ப்பை நான் எவ்வாறு சிறப்பாக பயன்படுத்தப் போகிறேன். எப்படி பெரிய ரன்கள் சேர்த்து அணிக்கு உதவப் போகிறேன் என்று தான் நான் கவனம் செலுத்தி வருகிறேன்.

சுமை குறையும்

சுமை குறையும்

கடைசியாக நாங்கள் விளையாடிய போது கூட 50 ஓவரும் நின்று விளையாட வேண்டும் என்று தான் நினைத்தேன். அதிக நேரம் களத்தில் நின்று பேட்டிங் செய்ய வேண்டும் என்பது குறித்து தான் நாங்கள் அணியின் ஆலோசனை கூட்டத்தில் கூட பேசினோம். அப்படி செய்தால் மட்டுமே இறுதி வரிசையில் வரும் வீரர்கள் அதிரடியாக ஆடி பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியும். நாங்கள் அதிக ஓவர்கள் பேட் பிடித்தால் மற்ற வீரர்களுக்கு சுமை குறையும். அவர்கள் எந்த நெருக்கடியும் இன்றி ரன் அடிக்கலாம் .

Story first published: Sunday, November 27, 2022, 21:43 [IST]
Other articles published on Nov 27, 2022
English summary
Indian cricketer shubman gill gives a idea to play under the roof stadium during rain ரொம்ப கடுப்பா இருக்கு! மழையால் ஆட்டம் நிறுத்துவதை தடுக்க சுப்மான் கில் தந்த ஐடியா!யோசிக்குமா பிசிசிஐ
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X