For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பண்டியா, அக்சர், ஷர்துல் காயம்.. மாற்றாக ஜடேஜா உள்ளிட்ட 3 வீரர்கள் துபாய் பயணம்

Recommended Video

காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார் ஹர்திக் பாண்டியா

துபாய் : இந்திய அணியில் மூன்று வீரர்கள் காயம் அடைந்து இருப்பதால், அவர்களுக்கு பதில் மூன்று வீரர்கள் அணியில் சேர உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

நேற்றைய பாகிஸ்தான் போட்டியில் பண்டியா காயமடைந்தார். அவர் முதுகில் காயம் அடைந்தார். இந்த தகவல் மட்டுமே அனைவருக்கும் தெரிந்த நிலையில், தற்போது புதிய தகவலாக மேலும் இரண்டு வீரர்கள் காயம் அடைந்து இருப்பதாக பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த மூன்று வீரர்களுக்கு என்ன காயம், அவர்களுக்கு பதில் எந்தெந்த வீரர்கள் அணியில் இடம் பிடிக்கிறார்கள் என்ற விவரம் தெரிய வந்துள்ளது.

பண்டியாவுக்கு முதுகு வலி

பண்டியாவுக்கு முதுகு வலி

நேற்று பாகிஸ்தான் போட்டியின் போது பண்டியாவுக்கு முதுகில் வலி ஏற்பட்டது. பாதி போட்டியிலேயே அவர் வெளியே அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு முதுகு வலி உள்ளதால், அடுத்து உள்ள போட்டிகளில் அவர் ஆட முடியாது என தெரிய வந்துள்ளது.

அக்சர் பட்டேல், ஷர்துல் காயம்

அக்சர் பட்டேல், ஷர்துல் காயம்

மேலும், அக்சர் பட்டேல் நேற்று பீல்டிங் செய்த போது விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. அதே போல, ஷர்துல் தாக்குர் ஹாங்காங் போட்டியில் இடுப்பில் ஏற்பட்ட உள்காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.

ஜடேஜா உள்ளே

ஜடேஜா உள்ளே

கடைசியாக ஜூலை 2017இல் ஒருநாள் போட்டிகளில் ஆடி இருக்கும் ஜடேஜா அக்சர் பட்டேலுக்கு மாற்று வீரராக இடம் பெறுகிறார். தற்போது அவர் விஜய் ஹசாரே தொடரில் ஆடி வருகிறார்.

தீபக் மற்றும் கவுல்

தீபக் மற்றும் கவுல்

பண்டியாவுக்கு மாற்று வீரராக தீபக் சாஹர் மற்றும் ஷர்துல் தாக்குருக்கு மாற்று வீரராக சித்தார்த் கவுல் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். இதன்படி ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்தியா நாளை வங்கதேச அணிக்கு எதிராக ஆட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, September 20, 2018, 15:16 [IST]
Other articles published on Sep 20, 2018
English summary
Injured Pandya, Axar Patel, Shardul Thakur replaced by Jadeja, Chahar and Kaul
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X