For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மும்பை vs பெங்களூர்: 7 ரன்களில் வீழ்ந்த கோஹ்லி.. பொளந்து கட்டிய பொல்லார்ட், பட்லர் ஜோடி

By Veera Kumar

பெங்களூர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற, இவ்விரு அணிகள் நடுவேயான கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

பெங்களூர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மும்பை அணி 18.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து வென்றது.

பெங்களூர் அணியின் தொடக்க வீரர் கோஹ்லி 7 பந்துகளை சந்தித்து ஒரு சிக்சருடன் 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஆட்டமிழந்தார். அவருக்காக பிரத்யேகமாக ஃபீல்டரை நிறுத்தி, அதற்கேற்ற வியூகத்தில் பந்தை மெக்ளனகன் வீசி கேட்ச் முறையில், ஆட்டமிழக்க செய்தார்.

கெயிலும் புஸ்வானம்

கெயிலும் புஸ்வானம்

அவரைத் தொடர்ந்து டி வில்லியர்ஸ் வந்தபோது, மறுமுனையில் நின்றிருந்த கெயில் 6 பந்துகளுக்கு ஒரு பவுண்டரியுடன் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து லோகேஷ் ராகுல் களம் கண்டார்.

வாட்சன் ரன் அவுட்

வாட்சன் ரன் அவுட்

அணியை காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட டி வில்லியர்ஸ், 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வாட்சன் களமிறங்கினார். லோகேஷ் ராகுல் நிலைத்து ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், 15 ரன்கள் எடுத்திருந்த வாட்சன், ரோஹித் சர்மாவால், அருமையாக ரன் அவுட் செய்யப்பட்டார்.

சச்சின் விளாசல்

சச்சின் விளாசல்

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சச்சின் பேபி, அரைசதம் கடந்த லோகேஷ் ராகுலுடன் இணைந்து நிலைத்தார். 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது பெங்களூர் அணி. அந்த அணியின் லோகேஷ் ராகுல் 53 பந்துகளில் 68 ரன்களுடனும், சச்சின் பேபி 13 பந்துகளில் 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

பலே பாண்டியா

பலே பாண்டியா

மும்பை அணி சார்பில், டிம் செளதி, மெக்ளனகன், கிருனால் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அதைத் தொடர்ந்து 152 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கியது மும்பை அணி. அதன் தொடக்க ஆட்டக்காரர் பார்திவ் படேல் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.

பின்னியெடுத்த பின்னி

பின்னியெடுத்த பின்னி

அதையடுத்து, ரோகித் சர்மாவும், அம்பத்தி ராயுடுவும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்நிலையில், 24 பந்துகளுக்கு 25 ரன்கள் எடுத்திருந்த ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நிதிஷ் ரானா 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சிக்ஸர் அடிக்க முயல, அதை பவுண்டரி லைன் அருகில் அருமையான கேட்ச்சாக மாற்றினார் ஸ்டுவர்ட் பின்னி.

பொல்லார்ட் விளாசல்

பொல்லார்ட் விளாசல்

விக்கெட்டுகள் சரிந்த நிலையில், களமிறங்கிய, பொல்லார்ட், அம்பத்தி ராயுடுவுடன் இணைந்தார். 44 ரன்கள் எடுத்திருந்த ராயுடு, வருன் ஆரோன் பந்துவீச்சில் டி வில்லியர்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ஜோஸ் பட்லரும், மறுமுனையில் நின்றிருந்த பொல்லார்டும் அடித்து விளாசி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

எளிதாக வெற்றி

எளிதாக வெற்றி

பொல்லார்ட் 35 ரன்களுடனும், ஜோஸ் பட்லர் 29 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த ஜோடி 21 பந்துகளில் 55 ரன் குவித்து வெற்றிக்கு வழி வகுத்தது. மும்பை அணி, 18.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து வென்றது. பெங்களூர் அணி சார்பில் வருன் ஆரோன் 2 விக்கெட்டுகளும், ஸ்ரீநாத் அரவிந்த், யுவேந்திர சாஹல் ஆகியோர் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

ஆட்ட நாயகன்

ஆட்ட நாயகன்

15 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்திய கிருனால் பாண்டியா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இவர் கடந்த முறை இவ்விரு அணிகளும் மோதியபோது, கோஹ்லி, டிவில்லியர்ஸ் ஆகிய இரு ஜாம்பவான் வீரர்களையும், ஒரே ஓவரில் ஆட்டமிழக்க செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, May 12, 2016, 10:51 [IST]
Other articles published on May 12, 2016
English summary
Mumbai Indians relied on a late assault from Kieron Pollard and Jos Buttler to beat Royal Challengers Bangalore by six wickets in their crucial IPL match and kept their hopes of a play-offs berth alive at M Chinnaswamy on Wednesday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X