கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடும் "தல" டோணியை காண சேப்பாக்கத்தில் சூழ்ந்த ரசிகர்கள்

Written By: Lakshmi Priya

சென்னை: ஐபிஎல் போட்டிகளுக்காக கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்ட தல டோணியை காண சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர்.

சூதாட்ட புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரு ஆண்டுகள் தடை முடிந்து இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் பங்கேற்கிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

 IPL 2018: Passionate CSK fans throng Chepauk as Thala MS Dhoni trains

டோணி மஞ்சள் நிற ஜெர்சியை போடவுள்ளார் என்பதால் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். ஐபிஎல் போட்டிகளுக்காக சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் பயிற்சியில் ஈடுபட வீரர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி, திறந்த நிலையிலான பேருந்தில் அவர் வந்து ரசிகர்கள் அதிர்ச்சி கொடுத்தனர். இதனால் மகிழ்ந்த ரசிகர்கள் அவர்களுக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர். கிரிக்கெட் வெறியர்கள் அந்த பேருந்தை பின்தொடர்ந்து சேப்பாக்கம் ஸ்டேடியத்துக்கு சென்றனர்.

வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவதை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தின் முன்பு திரண்டனர். அது ஒரு திருவிழா போல் காட்சி அளித்தது. அப்போது அவரவர் அவர்களுக்கு பிடித்தமான வீரர்களை முழக்கங்களால் உற்சாகப்படுத்தினர்.

இன்னும் சிலர் டோணி, டோணி என முழங்கியது காதை பிளந்தன. இதனால் வீரர்களும் உற்சாகமடைந்தனர்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Mahendra Singh Dhoni is undoubtedly the most popular name in Indian cricket and the craze grows manifolds when he sports the 'Yellow Jersey'. The cricketers gave a wonderful surprise to their fans in Chennai city as they travelled to the stadium in an open bus.
Story first published: Thursday, March 29, 2018, 11:08 [IST]
Other articles published on Mar 29, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற