For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மும்பை இந்தியன்ஸ் ஃபைனலுக்கு போனா.. தோனி டீம் கூட தான் ஆடியாகணும்.. அதுதானப்பா உலக வழக்கம்!

Recommended Video

IPL 2019 Finals: Chennai Vs Mumbai : இதுதான் உலக வழக்கம்- வீடியோ

சென்னை: 2019 ஐபிஎல் தொடரில் முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. அந்த அணியுடன் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தான் மோதும் என ஒரு சுவாரசிய புள்ளி விவரம் கூறுகிறது.

தற்போதைய சூழ்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இறுதிப் போட்டியில் மோத, சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் என மூன்று அணிகள் மல்லுக் கட்டிக் கொண்டு நிற்கின்றன.

சிஎஸ்கே ரசிகர்களே.. மன தைரியத்தோடு இருங்க.. ஃபைனலுக்கு போக இன்னொரு வாய்ப்பு இருக்கு! சிஎஸ்கே ரசிகர்களே.. மன தைரியத்தோடு இருங்க.. ஃபைனலுக்கு போக இன்னொரு வாய்ப்பு இருக்கு!

இறுதியில் யார்?

இறுதியில் யார்?

தகுதி நீக்கப் போட்டி (Eliminator), இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டி ஆகியவற்றின் முடிவில் தான் எந்த அணி மும்பை அணியுடன் மோத உள்ளது என தெரிய வரும். ஆனால், அந்த புள்ளி விவரம் எப்படி சென்னை தான் இறுதிப் போட்டிக்கு செல்லும் என கணிக்கிறது? இதோ விடை.

இறுதிப் போட்டிகளில் மும்பை

மும்பை இந்தியன்ஸ் அணி இதற்கு முன்பு நான்கு முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. அந்த நான்கில் மூன்று வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முக்கியமான விஷயம் அல்ல. அந்த நான்கு இறுதிப் போட்டிகளிலும், தோனி இடம் பெற்றிருந்த அணிகளையே சந்தித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

2010இல் தன் முதல் ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சந்தித்தது. அந்தப் போட்டியில் தோல்வி அடைந்தது. அடுத்து 2013, 2015 ஆண்டுகளிலும் அதே மும்பை இந்தியன்ஸ் - தோனி தலைமையிலான சென்னை இறுதிப் போட்டி. இந்த இரண்டிலும் மும்பை வெற்றி பெற்றது.

எதிரணியில் தோனி

எதிரணியில் தோனி

அடுத்து 2017இல் தோனி இடம் பெற்றிருந்த ரைஸிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணியை இறுதிப் போட்டியில் சந்தித்து வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ். ஆக, மும்பை இந்தியன்ஸ் பங்கேற்ற நான்கு இறுதிப் போட்டிகளிலும், எதிரணியில் தோனி இடம் பெற்று இருந்தார். கிட்டத்தட்ட அது ஒரு வழக்கமாகவே மாறி விட்டது.

நிம்மதி வரும்.. ஆனா வராது!

நிம்மதி வரும்.. ஆனா வராது!

இதை வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறி விடும் என சிஎஸ்கே மற்றும் தோனி ரசிகர்கள் நிம்மதி அடையலாம். அதே சமயம், நிம்மதி கெடாமல் இருக்க நான்கு இறுதிப் போட்டிகளில், தோனி ஆடிய அணிகளை மூன்று முறை மும்பை வீழ்த்தியுள்ளது என்பதை மறந்து விடவும்!!

Story first published: Wednesday, May 8, 2019, 14:32 [IST]
Other articles published on May 8, 2019
English summary
IPL 2019 : CSK will enter final if this pattern continues for Mumbai Indians. Dhoni played against every IPL final of Mumbai Indians.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X