
உலகக்கோப்பை பயிற்சி
ஐபிஎல் தொடர் முடிந்த உடன் உலகக்கோப்பை தொடர் துவங்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகளில் மற்ற நாடுகள் தீவிரமாக இறங்கி உள்ளன. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் உலகக்கோப்பைக்கு முன் பயிற்சி பெறும் வகையில் சில ஒருநாள் தொடர்களிலும், பயிற்சி முகாம்களிலும் பங்கேற்க உள்ளன.

திரும்ப உள்ளனர்
அதையொட்டி, தங்கள் நாட்டு அணிகளில் முக்கிய வீரர்களாக இருக்கும் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரும், இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவும் தங்கள் நாடுகளுக்கு அடுத்து வரும் நாட்களில் கிளம்ப உள்ளனர்.

மூன்றில் இரண்டு பங்கு
ஹைதராபாத் அணி இந்த தொடரில் இதுவரை எடுத்த ரன்களில் மூன்றில் இரண்டு பங்கு ரன்களை இவர்கள் இருவர் மட்டுமே எடுத்துள்ளனர். இவர்கள் இருவரும் சேர்ந்து 10 போட்டிகளில் 791 ரன்கள் குவித்துள்ளனர். வார்னர் - பேர்ஸ்டோவை தாண்டி ஒன்றிரண்டு வீரர்களே தங்கள் பேட்டிங் திறனை வெளிப்படுத்தி உள்ளனர்.

பலவீனமாகும் ஹைதராபாத்
எனவே, இவர்கள் இருவரும் சென்றுவிட்டால் ஹைதராபாத் அணியில் யார் துவக்க வீரர்களாக இறங்குவார்கள் என்பது தெரியவில்லை. அதே போல, இவர்கள் இருவரும் இல்லாத ஹைதராபாத் அணி படு மோசமாக காட்சி அளிக்கிறது.

வில்லியம்சன் நிலை
கடந்த சீசனில் அணியை கில்லியாக வழிநடத்தியதோடு, பேட்டிங்கில் கலக்கிய ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் இந்த முறை சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் செய்யவில்லை.

கிண்டல்
இந்நிலையில், ஹைதராபாத் அணி பிளே-ஆஃப் செல்ல அதிக வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக உள்ளது. ஆனால், முக்கிய வீரர்கள் இல்லாமல், பிளே-ஆஃப் சென்று என்ன செய்யப் போகிறார்கள்? என ஹைதராபாத் அணியை மற்ற ஐபிஎல் அணிகளின் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications