For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கொல்கத்தா வீரர்களே.. அந்த சத்தம் காதுல கேட்கலையா?.. கமுக்கமாக இருந்து மரண அடி கொடுத்த மொயீன் அலி!

கொல்கத்தா : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள், நடப்பு ஐபிஎல் தொடரின் 35வது லீக் போட்டியில் மோதின.

கொல்கத்தா அணி செய்த சிறிய தவறு அந்த அணிக்கு பெரிய வினையாக அமைந்தது. மொயீன் அலி அதை பயன்படுத்தி கொல்கத்தா பந்துவீச்சை சாத்திவிட்டார்.

சச்சின் சொன்ன டாஸ் யோசனை.. வெற்றி பெற்ற மும்பை.. வெளியான சுவாரஸ்ய தகவல்!! சச்சின் சொன்ன டாஸ் யோசனை.. வெற்றி பெற்ற மும்பை.. வெளியான சுவாரஸ்ய தகவல்!!

பெங்களூர் பேட்டிங்

பெங்களூர் பேட்டிங்

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது பெங்களூர் அணி. அந்த அணி 59 ரன்களில் இரண்டு விக்கெட்களை இழந்தது. மொயீன் அலி நான்காவது பேட்ஸ்மேனாக களமிறங்கி ஆடி வந்தார். 11வது ஓவரின் கடைசி பந்தை கொல்கத்தா வீரர் ரஸ்ஸல் வீசினார்.

தவற விட்டார்

தவற விட்டார்

அந்த பந்தை அடிக்க முற்பட்ட மொயீன் அலி, பந்து அகலமாக வந்ததால் தவற விட்டார். கீப்பர் வசம் சென்றது பந்து. இதுவரை எந்த தவறும் யார் கண்ணுக்கும் தெரியவில்லை. ஆனால், அதன்பின் டிவி ரீப்ளே காட்டப்பட்டது.

அவுட் கேட்கவில்லை

அவுட் கேட்கவில்லை

அதில் அல்ட்ராஎட்ஜ் தொழில்நுட்பத்தில், மொயீன் அலியின் பேட்டில் பந்து உரசிச் சென்ற பின்னரே விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கைகளுக்கு செல்வது தெரிந்தது. ஆனால், தினேஷ் கார்த்திக் உட்பட யாருமே அவுட் கேட்கவில்லை. எனவே, அம்பயரும் அவுட் கொடுக்கவில்லை. அம்பயருக்கும் கூட இந்த எட்ஜ் ஆனது தெரியுமா என்பது சந்தேகமே!

புரட்டி எடுத்த மொயீன் அலி

புரட்டி எடுத்த மொயீன் அலி

இதை யாருமே கேட்காமல் போக நேரில் பார்க்கும் ரசிகர்களின் இரைச்சல் காரணமாக இருக்கலாம். பந்து, பேட்டில் பட்ட சத்தத்தை கேட்காமல், சிறிய தவறு செய்த கொல்கத்தாவை, மொயீன் அலி புரட்டி எடுத்தார்.

மொயீன் அலி அதிரடி

மொயீன் அலி அதிரடி

9 ரன்கள் எடுத்து இருந்த போது தப்பித்த மொயீன் அலி, பின்னர் 28 பந்துகளில் 66 ரன்கள் அடித்து அனைவரையும் மிரள வைத்தார். 6 சிக்ஸர், 5 ஃபோர் அடித்து அசத்தினார். இவரது சராசரி 235 ஆக இருந்தது.

அதிர்வு

அதிர்வு

கொல்கத்தா வீரர்களுக்கு சத்தம் கேட்கவில்லை. ஆனால், மொயீன் அலிக்கு பந்து, பேட்டில் உரசியது தெரிந்திருக்க அதிக வாய்ப்புள்ளது. அவர், பந்து, தன் பேட்டில் உரசும் போது நிச்சயம் அதன் அதிர்வை கவனித்திருப்பார்.

அமைதி

அமைதி

ஆனால், அப்போது அமைதியாக இருந்த மொயீன் அலி, பின்னர் செம காட்டு காட்டி ரன் குவித்தார். அதன் பின் கேப்டன் கோலியும் அதிரடியாக ஆடி சதம் அடிக்க, பெங்களூர் அணி 20 ஓவர்களில் 213 ரன்கள் குவித்தது.

Story first published: Friday, April 19, 2019, 23:07 [IST]
Other articles published on Apr 19, 2019
English summary
IPL 2019 KKR vs RCB : Moeen Ali escaped from thin edge as nobody noticed it.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X