11 பந்துகள்.. ஆபத்தான சூழ்நிலையில் போராடிய ரசல்.. மெக்கலம் சொன்ன அந்த விஷயம்.. பரபர பின்னணி!

துபாய்: காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையிலும் கூட கொல்கத்தா அணிக்காக ஆண்ட்ரு ரசல் களத்திற்கு வந்தார் என்று அணியின் பயிற்சியாளர் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.

நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வென்று, பிளே ஆப் ரேஸில் உயிர்ப்புடன் இருக்கிறது. நேற்று முதலில் ஆடிய கொல்கத்தா 191 ரன்கள் எடுக்க, அதற்கு அடுத்து ஆடிய ராஜஸ்தான் 131 ரன்களில் சுருண்டது.

நேற்று காயத்துடன் களத்தில் வந்து ஆடிய ரசல் 11 பந்தில் 3 சிக்ஸ் உட்பட 25 ரன்கள் எடுத்தார். காயத்தோடு இவர் அடித்த 25 ரன்கள்.. கொல்கத்தா அணியின் ரன் ரேட்டை உயர்த்தி உள்ளது.

அவங்க 5 பேரை பாருங்க.. தினேஷ் கார்த்திக் பிளானை காலி செய்த குரூப்.. அவ்வளவுதான்.. எல்லாம் முடிந்தது!

என்ன நடந்தது

என்ன நடந்தது

ரசலின் ஆட்டம் குறித்து பேட்டி அளித்துள்ள மெக்கலம், ரசல் கொல்கத்தா அணிக்காக களமிறங்கி ஆட வந்தார். ஆனால் அவர் முழுமையாக குணமடையவில்லை. அவர் முழு பிட்னசில் இல்லை. ஆனாலும் அவர் அணிக்காக களமிறங்கினார். இதனால் அவரால் பவுலிங் செய்யவும் முடியவில்லை.

ராஜஸ்தான்

ராஜஸ்தான்

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டம் மிக முக்கியமானது. அதனால்தான் அவர் களத்திற்கு வந்தார். அவர் ஆபத்தான சூழ்நிலையில் இருந்தார். ஆனால் அணி வெற்றி பெற வேண்டும், முக்கியமான போட்டி என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இதனால் ரசல் தனது காயத்தை பொருட்படுத்தவில்லை.

களத்திற்கு வந்தார்

களத்திற்கு வந்தார்

அவர் உடனே களத்திற்கு செல்ல வேண்டும் என்று துடித்துக் கொண்டு இருந்தார். அணிக்காக எதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவர் 100% குணமடையவில்லை. ஆனாலும் அணிக்காக ஆடுகிறார். அவர் ஒரு 15-20 நிமிடம் ஆடினார். மொத்தமாக ஆட்டத்தையே மாற்றிவிட்டார்.

தூண் போல இருக்கிறார்

தூண் போல இருக்கிறார்

அவர் எங்கள் அணியின் தூண் போல இருக்கிறார். இதனால்தான் காயத்தை கூட அவர் கணக்கில் கொள்ளவில்லை. அவர் உலகின் சிறந்த டி 20 வீரர்களில் ஒருவர். அவர் இந்த சீசனில் சரியாக ஆடவில்லை.. ஆனால் ஒரே ஒரு போட்டியில் அவர் பார்மிற்கு திரும்பினால் போதும் எல்லாமே மொத்தமாக மாறிவிடும், என்று அணியின் பயிற்சியாளர் மெக்கலம் கூறியுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IPL 2020: Andre Russell came to field when he wasn't 100% fit
Story first published: Monday, November 2, 2020, 10:09 [IST]
Other articles published on Nov 2, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X