For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

DC vs KXIP : கடைசி ஓவர் ட்விஸ்ட்.. பரபர சூப்பர் ஓவர்.. பஞ்சாப் சொதப்பல்.. டெல்லி திக்திக் வெற்றி!

துபாய் : கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.

2௦20 ஐபிஎல் தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 157 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணிக்கு 158 ரன்கள் என்ற சவாலான இலக்கு நிர்ணயித்தது. பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 157 ரன்கள் எடுக்க போட்டி டை ஆனது. இதை அடுத்து 2020 ஐபிஎல் தொடரின் முதல் சூப்பர் ஓவர் நடந்தது.

வரமாட்டியா.. களத்திலேயே கோபம் அடைந்த தவான்.. வரமாட்டியா.. களத்திலேயே கோபம் அடைந்த தவான்.. "சின்ன பையன்" பிரித்வியுடன் மோதல்.. பரபரப்பு!

ஐபிஎல்

ஐபிஎல்

2௦20 ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இடையே ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் பாதிப்பு அதிகமாக இருப்பதால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் முதல் போட்டி செப்டம்பர் 19 அன்று துவங்கியது.

டாஸ் வென்ற பஞ்சாப்

டாஸ் வென்ற பஞ்சாப்

லீக் சுற்றின் இரண்டாவது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் கேஎல் ராகுல் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

துவக்கம் சொதப்பல்

துவக்கம் சொதப்பல்

டெல்லி அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தும், டக் அவுட் ஆகியும் ஏமாற்றம் அளித்தனர். ப்ரித்வி ஷா 5, ஷிகர் தவான் 0, ஹெட்மயர் 7 ரன்களில் வரிசையாக ஆட்டமிழந்தனர். அடுத்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், பண்ட் அணியை காப்பாற்றினர்.

டெல்லி அதிரடி

டெல்லி அதிரடி

ஸ்ரேயாஸ் ஐயர் 39, ரிஷப் பண்ட் 31 ரன்கள் எடுத்தனர். 17 ஓவர்களில் டெல்லி அணி 100 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாப நிலையில் இருந்தது. அப்போது மார்கஸ் ஸ்டோனிஸ் கடைசி மூன்று ஓவர்களில் அதிரடி ஆட்டம் ஆடி டெல்லி அணி 57 ரன்கள் சேர்க்க காரணமாக இருந்தார்.

ஸ்டோனிஸ் அரைசதம்

ஸ்டோனிஸ் அரைசதம்

கடைசி ஓவரில் மட்டும் டெல்லி அணி 30 ரன்கள் குவித்தது. ஸ்டோனிஸ் 21 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார். 7 ஃபோர், 3 சிக்ஸ் அடித்து இருந்தார் அவர். டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணிக்கு 158 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பஞ்சாப் விக்கெட் வீழ்ச்சி

பஞ்சாப் விக்கெட் வீழ்ச்சி

பஞ்சாப் அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்து வந்தது. ராகுல் 21, கருண் நாயர் 1, நிக்கோலஸ் பூரன் 0, மேக்ஸ்வெல் 1, சர்ப்ராஸ் கான் 12, கிருஷ்ணப்பா கௌதம் 20 ரன்களில் ஆட்டமிழந்தனர். விக்கெட்கள் வீழ்ந்தாலும் மறுபுறம் மயங்க் அகர்வால் தனி ஆளாக ரன் குவித்து வந்தார்.

கடைசி ஓவர்

கடைசி ஓவர்

கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில் மயங்க் அகர்வால் முதல் பந்தில் சிக்ஸ் அடித்தார். கடைசி 3 பந்துகளில் 1 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அவர் 89 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டோனிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

போட்டி டை ஆனது

போட்டி டை ஆனது

அதற்கு அடுத்ததாக ஓவரின் கடைசி பந்தில் ஜோர்டான் டக் அவுட் ஆக போட்டி டை ஆனது. இந்த சீசனில் முதல் சூப்பர் ஓவர் நடைபெற்றது. சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்த ராகுல் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.

டெல்லி வெற்றி

டெல்லி வெற்றி

மூன்றாவது பந்தில் நிக்கோலஸ் பூரன் டக் அவுட் ஆனார். 3 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சூப்பர் ஓவரில் ஆடிய டெல்லி அணி இரண்டு பந்துகளில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. டெல்லி அணி பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டதால் வெற்றி பெற்றது.

Story first published: Monday, September 21, 2020, 0:13 [IST]
Other articles published on Sep 21, 2020
English summary
IPL 2020 News in Tamil : IPL 2020 DC vs KXIP : Delhi Capitals vs Kings XI Punjab Match updates. New captain KL Rahul to lead KXIP.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X