For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அதே திட்டம்.. தோனிக்கு எதிராக மொத்தமாக இறங்கிய முன்னாள் வீரர்கள்.. சிஎஸ்கேவிற்கு பிரஷர்.. பின்னணி!

துபாய்: சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு எதிராக முன்னாள் மூத்த வீரர்கள் பலர் தொடர்ந்து குரல் கொடுத்து வருவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிஎஸ்கே அணி எப்போதும் போல இந்த ஐபிஎல் தொடரிலும் அதிரடியாக விளையாடி வருகிறது. முதல் போட்டியில் மும்பைக்கு எதிராக அதிரடி வெற்றிபெற்றது.

அதற்கு அடுத்த போட்டியில் ராஜஸ்தானிடம் தோல்வி அடைந்தாலும், 200 ரன்கள் வரை எடுத்து அதிரடி காட்டியது. சென்னை இந்த முறையும் ரசிகர்களுக்கு விருந்தாக மாறியுள்ளது.

மாற்றம்

மாற்றம்

இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் தோனி மட்டும் தொடர் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. தோனியின் பேட்டிங் சரியில்லை.தோனி சரியாக கீப்பிங் செய்வது இல்லை. அவரின் கேப்டன்சி முன்பு போல இல்லை. பேட்டிங் செய்ய பயந்து கொண்டு தோனி லேட்டாக களமிறங்குகிறார் என்று நிறைய புகார்கள் வைக்கப்பட்டு வருகிறது.

முன்னாள் வீரர்கள்

முன்னாள் வீரர்கள்

முக்கியமாக முன்னாள் வீரர்கள் பலர் தோனிக்கு எதிராக கடுமையாக விமர்சனங்களை வைக்க தொடங்கி உள்ளனர். தோனியின் பேட்டிங் சரியில்லை. அவர் அணியை வெற்றிபெற வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆடவில்லை என்று கூற தொடங்கி உள்ளனர். சச்சின், சேவாக், கம்பீர், கெவின் பீட்டர்சன் என்று பலர் தோனிக்கு எதிராக விமர்சனம் வைத்து வருகிறார்கள்.

கம்பீர் விமர்சனம்

கம்பீர் விமர்சனம்

நேற்று தோனி குறித்து விமர்சனம் செய்த கம்பீர், சென்னை அணியில் இக்கட்டான சூழ்நிலையில் கூட தோனி துணிந்து செயல்படவில்லை. அவர் ஏன் பேட்டிங் களமிறங்க இவ்வளவு தாமதம் செய்தார். அவர் 7வது இடத்தில் இறங்கியதை பார்க்க எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அது மிகவும் தவறான முடிவு. ஒரு கேப்டன் இப்படி செய்ய கூடாது. ஒரு கேப்டனாக அவர் முன்பே களமிறங்கி இருக்க வேண்டும்.

கேப்டன் அழகு

கேப்டன் அழகு

முன்பே அவர் களமிறங்கி ஆடி இருக்க வேண்டும். ஒரு கேப்டனுக்கு அதுதான் அழகு. தோனி செய்தது தவறு,என்று கம்பீர் குறிப்பிட்டார். அதேபோல் தோனி மிக மோசமாக பேட்டிங் செய்தார். சென்னை அணியை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று நோக்கத்தோடு அவர் விளையாட வேண்டும். ஆனால் அவரின் பேட்டிங்கில் நிறைய தவறு இருந்தது.

கொஞ்சம் இல்லை

கொஞ்சம் இல்லை

சிஎஸ்கேவை வெல்ல வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் கொஞ்சம் கூட விளையாடவில்லை. தோனியின் ஆட்டத்தில் வேகம் குறைந்து, தவறுகள் அதிகரித்து உள்ளது என்று சேவாக் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.அதேபோல் தோனியின் பேட்டிங் குறித்து முன்னாள் இங்கிலாந்து ஜாம்பவான் கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், தோனியின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஒரு முட்டாள்தனமான பதில். அவர் தான் 7வது ஆடுவது குறித்து சரியாக விளக்கம் அளிக்கவில்லை .

சோதனை முயற்சி

சோதனை முயற்சி

அவர் சோதனை முயற்சிகளை செய்து பார்க்கலாம். அதில் தவறு இல்லை. ஆனால் ஒரு தொடரின் தொடக்கத்திலேயே இப்படி சோதனை முயற்சி செய்தது சரியில்லை. டி20 போட்டிகளில் எப்போது என்ன நடக்கும் என்று தெரியாது. டி20 தொடரில் மொத்தமாக எப்போது வேண்டுமானாலும் தொடர் கையை விட்டு போகும், என்று குறிப்பிட்டு இருந்தார்.

எப்படி நிலைமை

எப்படி நிலைமை

தோனிக்கு எதிராக உலகக் கோப்பை தொடரின் போதும் இதேபோல்தான் அழுத்தம் வைக்கப்பட்டது. தோனி சரியாக ஆடுவதில்லை. பழைய பார்மில் இல்லை. சிங்கிள் எடுக்கிறார். இந்திய அணியை வெற்றிபெற வைக்கும் என்ற எண்ணத்துடன் அவர் விளையாடவில்லை. அவர் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டது.

ரிட்டையர்

ரிட்டையர்

தோனியின் ஆட்டம் குறித்து தொடர்ந்து இப்படி விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இந்த அழுத்தம் காரணமாகவே தோனி இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது ஐபிஎல் தொடரிலும் அதே போல முன்னணி வீரர்கள் தோனி மீது அழுத்தம் கொடுக்க தொடங்கி உள்ளனர். தற்போது சிஎஸ்கே அணியில் இருந்தும் தோனியை வெளியேற்ற இவர்கள் அழுத்தம் கொடுக்கிறார்கள் என்று தோனியின் ரசிகர்கள் குற்றஞ்சாட்ட தொடங்கி உள்ளனர்.

Story first published: Thursday, September 24, 2020, 16:46 [IST]
Other articles published on Sep 24, 2020
English summary
IPL 2020: Former players give too much pressure on Dhoni head just like world cup 2019.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X