பேட்டிங் பண்ணனும்னு சொல்லிட்டு போனீங்களே.. இப்ப என்ன ஆச்சு? தினேஷ் கார்த்திக்கை கிழித்த கம்பீர்!

துபாய்: பேட்டிங் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று தினேஷ் கார்த்திக் கேகேஆர் கேப்டன்சியை ராஜினாமா செய்தது தவறு என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

2020 ஐபிஎல் தொடரில் புதிய திருப்பமாக கொல்கத்தா அணி பிளே ஆப் வாய்ப்பை இழக்கும் நிலைக்கு சென்றுள்ளது. தற்போது வரை 13 போட்டிகளில் ஆடி உள்ள கொல்கத்தா அணி 6 போட்டிகளில் வென்றுள்ளது.

பிளே ஆப் செல்லும் என்று நம்பப்பட்ட அணி தற்போது பிளே ஆப் வாய்ப்பை இழக்கும் நிலைக்கு சென்றுள்ளது. மிக மோசமான ரன் ரேட் கொண்டு இருப்பதால் கொல்கத்தா அணி பிளே ஆப் செல்வது கடினம் என்கிறார்கள்.

பேட்டி

பேட்டி

இந்த நிலையில் பேட்டிங் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று தினேஷ் கார்த்திக் கேகேஆர் கேப்டன்சியை ராஜினாமா செய்தது தவறு என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். அவர் தனது பேட்டியில், கொல்கத்தா அணியில் கேப்டன்சி மாறியதில் இருந்தே அந்த அணி பிரச்சனையை சந்தித்து வருகிறது. இது முழுக்க முழுக்க தினேஷ் கார்த்திக்கின் தவறுதான்.

கவனம்

கவனம்

உங்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்று இதில் இருந்தே தெரிகிறது. உங்கள் பேட்டிங் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று கூறிவிட்டு.. கேப்டன்சியை விட்டு சென்றீர்கள். ஆனால் அது கொஞ்சம் கூட வேலை செய்யவில்லை.

ஒருவேளை எப்படி

ஒருவேளை எப்படி

ஒருவேளை உங்களுக்கு கேப்டன் பொறுப்பு இருந்தால், அந்த அச்சம் மற்றும் பொறுப்பு காரணமாக நன்றாக ஆடி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நான் 2014ல் கேப்டனாக இருந்த போது இதேபோல் வரிசையாக மூன்று போட்டிகளில் டக் அவுட் ஆனேன்.

பொறுப்பு

பொறுப்பு

அப்போது கேப்டன்சியில் இருந்த பொறுப்பு என்னை நன்றாக ஆட தூண்டியது. ஒரு கேப்டனாக சரியாக ஆட வேண்டும் என்று நினைத்தேன். இதன் காரணமாக நான் பார்மிற்கு திரும்பினேன்.

சோபிக்க முடியாது

சோபிக்க முடியாது

அதேபோல் நான் பேட்டிங் மூலம் சோபிக்க முடியாத போது கேப்டன்சி மூலம் அணியை வெற்றிபெற வைத்தேன். இதனால் அணியின் வெற்றிக்கு ஒரு வகையில் காரணமாக இருந்தேன். ஆனால் தினேஷ் கார்த்திக் அந்த வாய்ப்பை தவற விட்டு மோசமான முடிவை எடுத்துவிட்டார், என்று கம்பீர் கூறியுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IPL 2020: Gautam Gambhir slams Dinesh Karthik for his batting
Story first published: Saturday, October 31, 2020, 12:55 [IST]
Other articles published on Oct 31, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X