For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தமிழக வீரருக்கு நினைத்து பார்க்க முடியாத கவுரவம்.. நடராஜனை கொண்டாடும் ஹைதராபாத்.. வார்னர் செம முடிவு

துபாய்: ஹைதராபாத் அணியில் தற்போது விளையாடி வரும் தமிழக வீரர் நடராஜனுக்கு அந்த அணி நிர்வாகம் மிகப்பெரிய பொறுப்பு ஒன்றை கொடுக்க உள்ளது.

2020 ஐபிஎல் தொடரில் இளம் வீரர்கள் பலர் கலக்கி வருகிறார்கள். அதிலும் தமிழகத்தை சேர்ந்த மூன்று இளம் பவுலர்கள் பெரிய அளவில் நம்பிக்கை அளித்துள்ளனர். வாஷிங்டன் சுந்தர், முருகன் அஸ்வின் மற்றும் சேலத்தை சேர்ந்த நடராஜன் பெரிய அளவில் நம்பிக்கை அளித்து வருகிறார்கள்.

தமிழகத்தில் இருந்து கடந்த 10 வருடங்களாக ஸ்பின் பவுலர்கள் மட்டுமே இந்திய அணிக்கு தேர்வான நிலையில் தற்போது நடராஜன் என்ற லெப்ட் ஆர்ம் ஸ்பீட் பவுலர் அதிக கவனம் ஈர்த்து உள்ளார்.

பவுலிங்

பவுலிங்

சேலத்தை சேர்ந்த நடராஜன் பவுலிங்கின் சிறப்பு என்று பார்த்தால் யார்க்கர்தான். ஒரு ஓவரில் இவர் நினைத்தால் ஆறு பாலும் யார்க்கராக போட முடியும். அதேபோல் மிக சாதாரணமாக 145 கிமீ வேகத்தில் இவரால் பந்து வீச முடிகிறது. இந்த ஐபிஎல் தொடரில் பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லோரும் நடராஜன் பவுலிங்கை பார்த்து மிரண்டு போய் உள்ளனர்.

சார்ஜா

சார்ஜா

அதிலும் சார்ஜா போன்ற மிக சின்ன மைதானத்தில் கூட இவரால் விக்கெட் எடுத்து சொற்ப ரன்களில் வீரர்களை கட்டுப்படுத்த முடிகிறது. இவரின் பவுலிங்கை பிரிட்லி போன்ற ஜாம்பவான்கள் கூட பாராட்டி வருகிறார்கள். விரைவில் இவர் இந்திய அணிக்கு தேர்வாக வாய்ப்புள்ளது என்றும் கூட கணிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத் அணியில் இருக்கும் சக வீரரான புவனேஷ்வர் குமார் நடராஜனுக்கு பெரிய அளவில் உறுதுணையாக உள்ளார்.

துணையாக உள்ளார்

துணையாக உள்ளார்

இந்த நிலையில் ஹைதராபாத் அணியின் முக்கிய வீரரான புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். இவரின் இடுப்பு மற்றும் தொடையில் காயம் ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு எதிராக நடந்த கடந்த போட்டியில் காயம் காரணமாக புவனேஷ்வர் குமார் பாதியில் வெளியேறினார். அதன்பின் மொத்தமாக ஐபிஎல் தொடரில் இருந்தே புவனேஷ்வர்குமார் வெளியேறினார். நேற்றுதான் இதற்கான அறிவிப்பு வெளியானது.

யார் இல்லை

யார் இல்லை

ஏற்கனவே மிட்சல் மார்ஷ் வெளியேறிய நிலையில் தற்போது புவனேஷ்வர் குமாரும் வெளியேறி உள்ளார். இதனால் அணியில் மொத்த ஸ்பீட் பவுலிங் பொறுப்பும் நடராஜன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் அணியின் ஸ்பீட் பவுலிங் யூனிட்டை புவனேஷ்வர் கமார் வழி நடத்தி வந்தார். அவர் வெளியேறி உள்ள நிலையில், நடராஜன் பவுலிங் யூனிட்டை வழி நடத்த போகிறார்.

வேறு யார்

வேறு யார்

அணியில் இருக்கும் மற்ற வீரர்களான கலீல் அஹமது போன்ற வீரர்கள் சரியாக பவுலிங் செய்வது இல்லை. இதனால் நடராஜன் மீதான நம்பிக்கை அதிகம் ஆகியுள்ளது. இதனால்தான் வார்னர் நடராஜனுக்கு இவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்துள்ளார் என்று தகவல்கள் வருகிறது. புவி இல்லாத நிலையில் நடராஜன் பவுலிங் ஹைதராபாத் அணிக்கு மிக முக்கியமான துருப்பு சீட்டாக மாறியுள்ளது.

Story first published: Tuesday, October 6, 2020, 18:08 [IST]
Other articles published on Oct 6, 2020
English summary
IPL 2020: Natarajan to take control of the bowling unit in SRH in the absence of Marsh and Bhuvi.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X