For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தொடர்ந்த கோரிக்கை... நாளை ஐபிஎல் அட்டவணை வெளியீடு... ஒருவழியாக வழிக்குவந்த பிசிசிஐ

மும்பை : ஐபிஎல் 2020 போட்டிகள் வரும் 19ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதிவரை நடைபெறவுள்ளன. இதையொட்டி 8 அணிகளை சேர்ந்த வீரர்களும் துபாய் மற்றும் அபுதாபியில் உள்ளனர்.

Recommended Video

IPL 2020 Schedule நாளை வெளியீடு: Ganguly அறிவிப்பு | OneIndia Tamil

சிஎஸ்கே அணி தவிர்த்து மற்ற அணிகள் பயிற்சி ஆட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. சிஎஸ்கே அணி நாளை முதல் பயிற்சிகளை துவக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் துவங்க இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் அட்டவணையை வெளியிட ஐபிஎல் அணிகள் தொடர்ந்து வலியுறுத்திவந்த நிலையில் அதன் அட்டவணை நாளை வெளியிடப்படும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார்.

முதலில் சிஎஸ்கே.. இப்ப இவங்க.. வரிசையாக பரவும் கொரோனா.. இன்னும் 18 நாள்தான்.. 2020 ஐபிஎல் கேன்சல்?முதலில் சிஎஸ்கே.. இப்ப இவங்க.. வரிசையாக பரவும் கொரோனா.. இன்னும் 18 நாள்தான்.. 2020 ஐபிஎல் கேன்சல்?

சிஎஸ்கே நாளை பயிற்சி

சிஎஸ்கே நாளை பயிற்சி

ஐபிஎல் 2020 போட்டிகள் வரும் 19ம் தேதி யூஏஇயின் துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் துவங்கி நடைபெறவுள்ளன. இதையொட்டி 8 அணிகளை சேர்ந்த வீரர்களும் யூஏஇக்கு பயணம் மேற்கொண்டு அங்கு தங்களது குவாரன்டைனை முடித்துக் கொண்டு தற்போது பயிற்சி ஆட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். சிஎஸ்கே அணி மட்டும் நாளை முதல் பயிற்சிகளை துவங்கவுள்ளது.

அட்டவணையை வெளியிட வலியுறுத்தல்

அட்டவணையை வெளியிட வலியுறுத்தல்

ஐபிஎல் போட்டிகள் துவங்க இன்னும் 15 நாட்களே உள்ளன. இந்நிலையில் அதன் அட்டவணையை வெளியிட வேண்டும் என்று ஐபிஎல் அணிகள் பிசிசிஐ-ஐ வலியுறுத்தி வந்தன. இதன்மூலம் தாங்கள் தங்களது திட்டங்களை வகுக்க முடியும் என்றும் தெரிவித்து வந்தன. ஆனால் சிஎஸ்கே வீரர்களுக்கு கொரோனா, அபுதாபியில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு உள்ளிட்ட காரங்களால் அட்டவணையை பிசிசிஐ வெளியிடாமல் இருந்துவந்தது.

பிசிசிஐ தலைவர் அறிவிப்பு

பிசிசிஐ தலைவர் அறிவிப்பு

இந்நிலையில் தற்போது பிசிசிஐயின் தலைவர் சவுரவ் கங்குலி நாளை ஐபிஎல் 2020ன் அட்டவணை வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார். இதன்மூலம் எந்த போட்டி முதலில் நடக்கும், எந்தப் போட்டிகள் பிற்பகலில் நடக்கும் என்பது உள்ளிட்ட பல்வேறு குழப்பங்களுக்கு விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அட்டவணை மூலம் அணிகள் தெளிவுபெறும். ரசிகர்களும் தங்களுக்கு பிடித்தமான அணிகள் எப்போது விளையாடுவார்கள் என்று அறிய முடியும்.

ஒவ்வொன்றாக நிவர்த்தி செய்யும் பிசிசிஐ

ஒவ்வொன்றாக நிவர்த்தி செய்யும் பிசிசிஐ

இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் யூஏஇயில் நடைபெறவுள்ளன. கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல்லில் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகள் இருந்து வருகின்றன. ஸ்பான்சர்ஷிப்பில் ஆரம்பித்து அட்டவணை வரை எல்லாவற்றிலும் பிரச்சினைகளை எதிர்கொண்டுவந்த பிசிசிஐ தற்போது ஒவ்வொன்றாக தீர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, September 3, 2020, 13:36 [IST]
Other articles published on Sep 3, 2020
English summary
IPL schedule will be released on September 4th -Ganguly announces
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X