For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோலி கூட முக்கியமில்லை போல... கெத்துக்காட்டும் தோனி... டிவில்லியர்ஸின் விருப்ப அணி இதோ!

சென்னை: ஐபிஎல்-ல் தனது ஆல் டைம் விருப்பமான ப்ளேயிங் 11-ஐ ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் 9ம் தேதி தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தங்களது வீரர்களை தயார்படுத்தி வருகிறது.

இந்நிலையில் அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸின் விருப்ப ஐபிஎல் அணியில் முக்கிய வீரர்களுக்கே இடமில்லாமல் போயுள்ளது.

டிவில்லியர்ஸ் அணி

டிவில்லியர்ஸ் அணி

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த் அதிரடி ஆட்டக்காரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்காக சென்னை வந்து சேர்ந்துள்ளார். தற்போது ஐபிஎல்-ல் விராட் கோலியின் தலைமையிலான பெங்களூர் அணிக்காக இவர் ஆடி வருகிறார். இந்நிலையில் இவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் ஐபிஎல்-ல் தனது விருப்ப அணியை பகிர்ந்துள்ளார்.

பேட்டிங் தேர்வு

பேட்டிங் தேர்வு

அதில், அணியின் கேப்டனாக எம்.எஸ்.தோனி இடம் பிடித்து கெத்து காட்டியுள்ளார். அதன்படி அணியில் ஓப்பனிங்கிற்கு விரேந்திர சேவாக், ரோகித் சர்மா இடம் பிடித்துள்ளனர். விராட் கோலி 3வது இடத்திற்கு தேர்வாகியுள்ளார். 4வது வீரராக வில்லியம்சன் அல்லது ஸ்மித் அல்லது டிவில்லியர்ஸே களமிறங்குவார் என தெரிவித்தார். 5வது வீரராக இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் 6வது வீரராக எம்.எஸ்.தோனி இடம்பிடித்துள்ளனர்.

பவுலிங் தேர்வு

பவுலிங் தேர்வு

ஆல்ரவுண்டர்களை பொறுத்தவரை 7வது வீரரக ஜடேஜா மற்றும் 8வது வீரராக ரஷித் கார்ன் இடம் பெற்றுள்ளனர். பவுலிங்கில் 8வது இடத்தில் புவேனேஷ்வர் குமார், 9வது இடத்தில் ரபாடா மற்றும் 11வது இடத்தில் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரை ட்வில்லியர்ஸ் தேர்வு செய்துள்ளார்.

அணி

அணி

சேவாக், ரோகித் சர்மா, விராட் கோலி, ஸ்மித்/ வில்லியம்சன்/ டிவில்லியர்ஸ், பென் ஸ்டோக்ஸ், தோனி ( கேப்டன்) , ஜடேஜா, ரஷித் கான், புவனேஷ்வர் குமார், ரபாடா, பும்ரா

முக்கிய வீரர்கள்

முக்கிய வீரர்கள்

டிவில்லியர்ஸுன் ஐபிஎல் விருப்ப அணியில் 2 முக்கிய வீரர்கள் இடம் பெறவில்லை. ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை குவித்துள்ள 2வது வீரரான சுரேஷ் ரெய்னா மற்றும் பவுலிங்கில் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்களை வீழ்த்தியுள்ள மலிங்கா ஆகியோர் டிவில்லியர்ஸ் அணியில் இடம்பெறவில்லை.

Story first published: Friday, April 2, 2021, 21:34 [IST]
Other articles published on Apr 2, 2021
English summary
IPL 2021: AB de Villiers picks his all-time IPL XI on that MS Dhoni over Virat Kohli
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X